ஞாயிற்றுக்கிழமை அதாவது நடைபெற்ற 100வது ஆண்டு ஸ்பானிஷ் ஹாக்கி ஃபெடரேஷன் – சர்வதேசப் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் நடப்பு எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் சாம்பியனான நெதர்லாந்தை வென்றது. இதனால் ஸ்பானிஷ் ஹாக்கி ஃபெடரேஷன் – சர்வதேசப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்து, வெண்கலப் பதக்கம் வென்றது.
இரு அணிகளுக்கும் இடையில் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்றது. யார் முதலில் கோல் அடிப்பார் என்ற ஆவல் போட்டியை கண்டவர்கள் மத்தியில் எழுந்தது. இரு அணி வீரர்களும் ஒரு நொடி கூட சளைக்காமல் தங்களது அணியை வெற்றிக்கு கொண்டு செல்வதில் மிகவும் உத்வேகமாக விளையாடினர். ஆனால் இரு அணி வீரர்களாளும் நேரடியாக கோல் அடிக்கமுடியவில்லை. போட்டியில் மொத்தம் 3 கோல்கள் அடிக்கப்பட்டது. மூன்று கோல்களும் பெனால்டி கார்னர்களில் இருந்து வந்தது.
அதாவது இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (15வது நிமிடத்திலும்), தில்பிரீத் சிங் (50வது நிமிடத்திலும்) ஆகியோர் இந்தியாவின் கடினமான வெற்றிக்கு கோல் அடிக்க, நெதர்லாந்து தரப்பில் தியரி பிரிங்க்மேன் (25வது நிமிடத்திலும்) கோல் அடித்தனர்.
போட்டியின் தொடக்கத்தில் நெதர்லாந்து அணியை ஸ்டிரைக்கிங் சர்க்கிளுக்குள் எளிதாக நுழைய இந்தியா அனுமதிக்கவே இல்லை. இதனாலே போட்டி விறுவிறுப்பாக துவங்கியது. மறுபுறம், அணியின் முன்கள வீரர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட, அது நெதர்லாந்து அணி வீரர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. இதனால், நெதர்லாந்து அணி வீரர்கள் தவறுகள் செய்ய நேர்ந்தது.
முதல் பாதியின் (15 நிமிடங்கள்) 30 வினாடிகள் எஞ்சியிருக்கும் நிலையில் ஃபார்ம் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத், 15 வது நிமிடத்தில் அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கச் செய்தார்.
20வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பிரிங்க்மேன் கோலாக மாற்றியதால் அடுத்த காலிறுதியில் நெதர்லாந்து அணி 1-1 என்ற கணக்கில் போட்டி சமநிலைக்கு வந்தது.
அதன் பின்னர், போட்டியில் விறுவிறுப்பு அதிகமானது.மூன்றாவது காலிறுதியில் கோல் எதுவும் அடிக்கவில்லை என்றாலும், நான்காவது காலிறுதி ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டுக்கு செல்லும் என ரசிகர்கள் மத்தியில் எண்ணம் ஏற்படும் அளவிற்கு இரு அணி வீரர்களும் அதிரடியாக விளையாடினர்.
அந்தாவது நான்காவது பாதியில் நெதர்லாந்து கோல் அடிப்பதற்கான சில வாய்ப்புகளை வீணடித்தபோது, இந்திய அணி தரப்பில் 50 வது நிமிடத்தில் ரோஹிதாஸ் கோல் அடிக்க போட்டியில் வெற்றி இந்திய அணிக்கு என கிட்டத்தட்ட உறுதியானது. இறுதியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி ஹாக்கி ஃபெடரேஷன் – சர்வதேசப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்து, வெண்கலப் பதக்கம் வென்றது.
மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்று சென்னை வந்தடைந்தது.