விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் மிகவும் ஸ்வாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் பழனிச்சாமி, லோபிகா இருவரும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு முன்னரே சென்று காத்திருக்க பாக்கியா கொஞ்சம் லேட்டாகத்தான் வருகிறாள். "முன்னாடி எல்லாம் மேடம் சீக்கிரமா கிளாஸுக்கு வந்தது லேட்டா காபி எல்லாம் சாப்பிட்டுவிட்டு தான் கிளம்புவாங்க. ஆனால் இப்போ ரொம்ப பிஸியானதால லேட்டா தான் வராங்க அதுவும் சீக்கிரம் கிளம்பிடுறாங்க" என்கிறார் பழனிசாமி. 



என்ன செய்யறது சார் ஏதாவது ஒரு வேலை இருந்துகிட்டே இருக்கு. நேற்று கூட லோன் விஷயமா பேங்க் போயிருந்தேன். ஆனால் டிகிரி முடித்தவர்களுக்கு தான் லோன் கொடுப்பார்களாம். நான் தான் டிகிரி முடிக்கலையே. அது தான் ஜெனி இல்லனா அமிர்தா பேர்ல எடுக்கலாம்னு இருக்கேன்" என்கிறாள் பாக்கியா.


"ஏன் நீங்க இப்போ கூட டிகிரி முடிக்கலாம். நாளைக்கு அவங்க இரண்டு பெரும் பிசினஸ் பண்ணலாம் என விருப்பப்பட்டு லோன் எடுக்கலாம் என முயற்சி பண்ணும் போது அப்போ உங்களுக்காக வாங்கின லோன் தொந்தரவா இருக்கும். யோசிச்சு முடிவெடுங்க" என பழனிச்சாமி சொல்கிறார். 


இனியா காலேஜ் வெளியில் பாக்கியாவும், எழிலும் பேசி கொண்டு இருக்கிறார்கள். பாக்கியா படிக்க வேண்டும் என தனக்கு இருக்கும் ஆசை பற்றி எழிலிடம் சொல்கிறாள். "உனக்கு படிக்கணும் என ஆசையா இருந்தா நீ படிம்மா" என அவனும் ஊக்கப்படுத்துகிறான்.


"இல்லடா ஏதோ ஆர்வத்துல உனக்கு போன் பண்ணிட்டேன். வேலையே சரியா இருக்கு. இதெல்லாம் பண்ண முடியாது" என பாக்கியா தனது ஆசையை மறைகிறாள். பாக்கியாவை அங்கேயே உட்காரவைத்து விட்டு அப்ளிக்கேஷன் ஃபார்ம் வாங்கி வந்து அவனே ஃபில் செய்து பாக்கியாவிடம் கையெழுத்து வாங்கி காலேஜில் சேர்த்து விடுகிறான். 



இரவு அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள். பாக்கியா உணவு பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது காலேஜ் போகிற விஷயத்தை பற்றி எப்படி சொல்வது என தெரியாமல் தயங்கி தயங்கி, ”இருப்பது ஒரே வாழ்க்கை அதனால் நாம ஆசைப்படுவதை செய்துவிட வேண்டும்” என தத்துவமாக பேசுகிறாள். அனைவரும் பாக்கியா பேசுவதை பார்த்து சிரிக்கிறார்கள். பாக்கியாவும் எழிலும் கண்ணால் பேசிக்கொள்வதை பார்த்து ஏதோ பாக்கியா சொல்ல வருவதை தெரிந்து கொள்கிறார்கள். 


எழிலில் பாக்கியா காலேஜ் சேர்ந்துள்ள விஷயம் பற்றி சொல்கிறான். அதை கேட்டு அனைவரும் ஷாக்காகிறார்கள். ”இருக்கிற வேலையில் உன்னால் எப்படி காலேஜ் போய் படிக்க முடியும்?” என ராமமூர்த்தி கேட்கிறார். ”என்னால் முடியும் மாமா” என பாக்கியா சொல்கிறாள். யாராவது ஒருத்தருக்கு விருப்பம் இல்லை என்றாலும் நான் போகமாட்டேன் என அனைவரின் சம்மதத்தையும் பெற்று கொள்கிறார். இனியா எந்த காலேஜ்? என கேட்க ”உன்னுடைய காலேஜ்தான்!” என பாக்கியா சொன்னதும் அதிர்ச்சியில் முகமே மாறிவிடுகிறது. அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது.