அட்லி இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படத்தின் முதல் பாடல் வெளியானது. 


விஜய் நடிப்பில் வெளியான பிகில், மெர்சல், தெறி படங்களை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த அட்லி, இந்தியில் ஜவான் படத்தை இயக்குகிரார். அனிரூத் இசை அமைக்கும் இந்த படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 7ம் தேதி ஜவான் படம் வெளியாவதை ஒட்டி படத்தின் அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. டீசரை தொடர்ந்து, நயன்தாரா, ஷாருக்கான், விஜய் சேதுபதி என ஒவ்வொருவரின் கேரக்டரை வெளியிட்ட படக்குழு இன்று முதல் பாடலை வெளியிட்டுள்ளது. 


வந்த எடம் என்ற பெயரில் வெளியான பாடலை அனிரூத் பாடியுள்ளார். அவரின் அதிரடி இசைக்கு ஏற்ப ஷாருக்கானின் குத்தாட்டம் ரசிகர்களையும் ஆட வைத்துள்ளது. ஷாருக்கானுடன், பிரியாமணி இணைந்து நடனமாடியுள்ள வந்த எடம் பாடல் பிரமாண்டத்தை காட்டுகிறது. பாலிவுட்டில் இசையில்  அறிமுகமாகியுள்ள அனிரூத் முதல் பாடலை பாடலை செம மாஸ் காட்டியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகும் ஜவான் படத்தின் இசை உரிமத்தை டீ-சீரியஸ் நிறுவனமும், தமிழின் வெளியீட்டு உரிமத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் பெற்றுள்ளன. 







ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான பதான், பான் இந்தியா படமாக வெளியாகி  மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து ஷாருக்கானின் அடுத்தப்படம் ஜவான் என்பதால், அவரது ரசிகர்கள் அதே வரிசையில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதேபோல், இந்தியில் ஃபார்சி வெப் சீரிசில் நடித்த விஜய்சேதுபதி, அடுத்ததாக ஜவானில் வில்லனாக வந்து மிரட்டியுள்ளார். விக்ரம் வேதா, விக்ரம், பேட்ட, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து விஜய் சேதுபதி, இந்தியில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார். மீண்டும் வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதியின் மிரட்டலை காண அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். நயன்தாராவும் பாலிவுட்டில் அதிரடி ஆக்‌ஷனில் களமிராங்கியுள்ளதால் அவரது நடிப்பையும் திரையில் காண மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.