நடிகை சமந்தாவின் பாலி சுற்றுலா முடிவடைந்த நிலையில், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது அழகான பயணத்தின் காட்சிகளைக் கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.




நடிகை சமந்தா தனது தோழியுடன் கடந்த சில நாட்களாக பாலி நகரில் விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழித்து வந்தார். இந்நிலையில், சமந்தா பாலியில் எடுத்துக் கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


சமந்தாவின் பாலி சுற்றுலா பயணம் முடிவடைந்துவிட்ட நிலையில், சமந்தாவின் தோழி அனுஷா சுவாமி, தாங்கள் பாலியில் செலவிட்ட மகிழ்ச்சியான தருணங்களை வீடியோவாக எடிட் செய்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  


சமந்தாவும் அவரின் தோழியும் மகிழ்ச்சியாக குதூகலித்த அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தாங்களும் கூட டூர் போக விரும்புவதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் சமந்தாவை இப்படி பார்க்க மகிழ்ச்சியாக உள்ளதாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 






மேலும் முன்னதாக சமந்தாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் வகேஷன் புகைப்படங்களை  மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். சமந்தா தற்போது நடிப்புக்கு ஒரு  பிரேக் கொடுத்துள்ளார். கடந்த 13 ஆண்டுகளாக திரையுலகில் தொடர்ந்து பணியாற்றி வரும் சமந்தா புத்துணர்வைப் பெற சுற்றுலா சென்று வருவதுடன், ஆன்மீக பயணமும் மேற்கொண்டு வருகிறார். 


சமந்தா நடித்து முடித்துள்ள சீட்டடெல் வெப் சீரிஸ் மற்றும் குஷி திரைப்படம் ஆகியவை வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன.  குஷி படத்தில் சமந்தா, விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீசுக்காக சமந்தா ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 


மேலும் படிக்க: Nayanthara : நயன்தாரா பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார்.. நடிகர் விஷால் ஆவேசம்...


Crime: அதிர்ந்த கேரளா! 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...உடலை குப்பை கிடங்கில் வீசிய கொடூரன்...