‘தியேட்டரில் தலைவரு அலப்பறை’ .. ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி? .. முதல் விமர்சனம் இதோ..!


நேர்மையாக இருக்கும் தனது போலீஸ் மகனுக்கு எதிரியால் ஆபத்து நேர்ந்தால், மீதம் இருக்கும் குடும்பத்தை காக்க, அப்பா என்ன செய்கிறார் என்பதே ஜெயிலர் படத்தின் ஒன்லைன் ஸ்டோரியாகும்.  சிலை கடத்தல் மன்னனாக விநாயகன் குழு செயல்படுகிறது. அந்த கடத்திய சிலை அடங்கிய கண்டெய்னர் லாரி போலீஸ் அதிகாரி வசந்த் ரவியால் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்தப் பிரச்னையில் அவர் காணாமல் போகிறார். வசந்த் ரவி கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் படிக்க


தெறிக்கவிடும் வசனங்கள்... பட்டையைக் கிளப்பும் துல்கரின் ‘கிங் ஆஃப் கோதா’ ட்ரெய்லர்!


இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் - வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இப்படத்துக்கு இசை அமைத்துள்ளனர். துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையை சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க


தனுஷ் முதல் ஐஸ்வர்யா வரை... ஜெயிலர் முதல் காட்சியை பார்த்து ரசித்த திரைப்பிரபலங்கள்!


ஜெயிலர் முதல் காட்சி பார்க்க படையெடுத்து வந்த பிரபலங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 'அண்ணாத்த' படத்துக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் இன்று உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, நடிகர்கள் மோகன் லால், சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, ஜீவிதா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் படிக்க


அந்த படத்தால மிஸ்.. தமிழ்நாட்ல பெரிய ஸ்டார் ஆகிருப்பார்.. ஜெயிலர் வில்லன் விநாயகனின் கதை..


நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாக நல்ல பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷ்ராஃப், வசந்த் ரவி, ஷிவராஜ்குமார், மோகன்லால், விநாயகன், தமன்னா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தின் முக்கிய வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடித்து அசத்தியிருக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். திமிரு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விநாயகன். மேலும் படிக்க


மீண்டும் பில்லா நாயகியாக மாறிய நயன்தாரா... மிரட்டும் விஜய் சேதுபதி... ஜவான் படத்தின் புதிய போஸ்டர்!


செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கும் ஜவான் திரைப்படத்தின்புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு பகிர்ந்துள்ளது. முன்னதாக ஷாருக்கானின் போஸ்டர் ஒன்றை படக்குழு பகிர்ந்த நிலையில் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா மற்றும் வில்லனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி என அனைவரும் இந்தப் போஸ்டரில் இடம்பிடித்துள்ளனர். ராஜா ராணியில் தன் இயக்குநர் பயணத்தைத் தொடங்கி, நடிகர் விஜய்யை வைத்து இயக்கி சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த அட்லீ, தற்போது பாலிவுட்டில் கால் பதிக்க இருக்கிறார். மேலும் படிக்க