- TN Rain Alert: இன்று 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? இதுதான் லேட்டஸ்ட் அப்டேட்...!
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 11.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க
- CM Stalin: ”திமுகவை கண்டு பாஜக நடுங்குகிறது; பூச்சாண்டிகளுக்கு பயப்படமாட்டோம்" - ஸ்மிருதி இராணிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி
கலைஞர் நூற்றாண்டு விழாவை மாவட்ட அணிகள் இணைந்து கொண்டாட தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, "வங்கக் கடலை நோக்கி மனிதக் கடல் செல்வது போல, அலை அலையாய்த் திரண்டு வந்த உடன்பிறப்புகள் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் நம் தலைவர் கலைஞர் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டேன். உங்களில் ஒருவனான என் நெஞ்சிலும் அவரே இருக்கிறார். அவரே நம்மை எந்நாளும் இயக்குகிறார். மேலும் படிக்க
- Minister Ponmudi Case: அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் செக்...! சொத்துகுவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்..
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவித்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அந்த வழக்கை தானாக முன் வந்து மறு விசாரணைக்கு எடுத்துள்ளார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் படிக்க
- UPSC Stipend: குட்நியூஸ்..! ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை.. யுபிஎஸ்சி முதன்மை தேர்வர்களே, ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..
மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான யுபிஎஸ்சி தேர்வில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு ஓவ்வொரு ஆண்டும் ஊக்கத்தொகை வழங்கும் என, நடப்பு நிதியாண்டில் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான ஊக்கத்தொகைக்கு விண்ணபிக்கும் முறை நாளை தொடங்கி 22ம் தேதி வரையில் நடைபெறும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- Nirmala Seetharaman: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டப்படாததற்கு காரணம் தமிழ்நாடு அரசுதான் - நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தரப்பில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டு வந்த நிலையில் அதனை பிரதமர் மோடி கண்டுக்கொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டி, அதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டனர். இதனைத் தொடர்ந்து இதற்கான நோட்டீஸ் எதிர்க்கட்சிகள் தரப்பில் வழங்கப்பட்டது. மேலும் படிக்க