Jailer Vinayakan : நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாக நல்ல பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷ்ராஃப், வசந்த் ரவி, ஷிவராஜ்குமார், மோகன்லால், விநாயகன், தமன்னா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
நடிகர் வினாயகன்
படத்தின் முக்கிய வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடித்து அசத்தியிருக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். திமிரு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விநாயகன். தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவர் நடிக்க முடியாமல் போனது. இன்று மலையாள சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக அவர் இருக்கிறார். ஆனால் அதே அளவிற்கு தமிழில் முக்கியமான நடிகராக அவர் இருந்திருக்க வேண்டியவர். இல்லாமல் போனதற்கு, ஒரே ஒரு நிகழ்வுதான் காரணம்.
நான் கடவுள்
நான் கடவுள் படத்திற்கு நடிகர்கள் தேர்வு செய்யப்பட்ட போது மலையாள நடிகர் விநாயகனை பரிந்துரை செய்திருக்கிறார் படத்தின் கதாசிரியர் ஜெயமோகன். விநாயகனை சந்தித்து பேசியபோது இயக்குநர் பாலாவிற்கு அவரை ரொம்ப பிடித்திருந்ததாம். ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஒரு பெரிய தொகையை சம்பளமாக விநாயகன் கேட்டதால் அவரை நடிக்க வைக்க முடியாமல் போனது.
மேலும் முதல் படம் நடிக்கும் ஒருவர் தனது வரம்புக்கு மீறி இவ்வளவு அதிகாமாக சம்பளம் கேட்டு தனக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பை இழக்கிறார் என்று அனைவரது கருத்தாகவும் இருந்திருக்கிறது. ஆனால் இன்று விநாயகன் பலமடங்கு பெரிய தொகையை சம்பளமாக பெற்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு வில்லனாக நடித்து பாராட்டுக்களை குவித்து வருகிறார். தனது திறமை மீதும் தன்னைப் பற்றிய ஒரு சரியான மதிப்பீடு அவரிடம் இருந்திருக்கிறது. அதனால் தான் அவர் எந்த இடத்திலும் யாருக்கும் பணிந்துபோகவில்லை” என்று தனது ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.
ஒருவேளை அன்று அவரது திறமைக்கு ஏற்ற சம்பளம் வழங்க படக்குழு ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று கோலிவுட்டின் மிகப்பெரிய குணச்சித்திர நடிகராக அவர் இருந்திருக்கலாம்.
சர்ச்சைகள்
நடிகராக ஒருபக்கம் பாராட்டுக்களைப் பெற்று வந்தாலும் மறுபக்கம் தனது ஒரு சில நடத்தைகளுக்காகவும் தனிப்பட்ட கருத்துக்களுக்காகவும் விமர்சிக்கப்பட்டும் வருகிறார் விநாயகன். மீ.டூ விவகாரம் தொர்பாக பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. மேலும் சமீபத்தில் தன்னுடன் சேர்ந்து பயணித்த ஒரு பெண் பயணியிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்ததாகவும் அவர்மீது புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் படிக்க : Jailer Review: ‘தியேட்டரில் தலைவரு அலப்பறை’ .. ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி? .. முதல் விமர்சனம் இதோ..!