“மீண்டும் சோழர்களின் பயணம்” - வெளியானது பொன்னியின் செல்வன் 2.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ் சினிமாவின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி,விக்ரம், த்ரிஷா, பிரபு, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் படிக்க
சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகளுடன் வெளியான ‘விடுதலை’ படம்.. ரசிகர்கள் ஷாக்..!
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி பெரும் வரவேற்பை பெற்ற விடுதலை படத்தின் முதல் பாகம் இன்று (ஏப்ரல் 28) ஓடிடியில் வெளியாகியுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்துள்ள நிலையில், வாத்தியார் எனப்படும் போராளி பெருமாள் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விடுதலை படம் மார்ச் 31 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிருந்தது மேலும் படிக்க
கஜினி பட நடிகை தற்கொலை வழக்கு... விடுதலை செய்யப்பட்ட நடிகர்...
கஜினி பட நடிகை ஜியா கானை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கைது செய்யப்பட்ட நடிகர் சூரஜ் பஞ்சோலி குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளாக பாலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பி வரும் தற்கொலை வழக்குகளில் ஜியா கான் தற்கொலை வழக்கும் ஒன்று. இவர் 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தொடர்ந்து தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டார். மேலும் படிக்க
'ஃபோன் மூலம் டைம் டிராவல்’ .. மாஸ் காட்டும் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் டீசர்..!
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக “மார்க் ஆண்டனி” படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக விஷாலும், ஹீரோயினாக ரித்து வர்மாவும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. போன் வழியாக காலத்தை கடத்தும் டைம் டிராவல் நிகழ்வுகள் இதில் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
என்னது வயசையும் அழகையும் கம்பேர் பண்ணுவீங்களா? தொகுப்பாளரால் கடுப்பான ஸ்ரேயா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ரஜினி முதல் தனுஷ் வரை அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா. இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது குழந்தை பெற்ற பிறகும் நீங்கள் எப்படி இவ்வளவு ஸ்லிம்மாக இருக்கிறீர்கள் எனக் கேள்வி கேட்ட தொகுப்பாளரை விளாசித் தள்ளிவிட்டார் ஸ்ரேயா. நீங்கள் கூறுவதை நான் பாராட்டாக எடுக்க முடியாது. திருமணமாகி குழந்தை பெற்றதற்கும் நான் அழகாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என கடுமையாக கேட்டார் ஸ்ரேயா. மேலும் படிக்க