சூர்யா நடிக்கும் ‘புறநானூறு’.. இணைந்த துல்கர், நஸ்ரியா.. வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்!


சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க, ஜி. வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் நூறாவது படம் சூர்யா 43 என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூர்யா 43 படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது . இந்தப் படத்திற்கு புறநானூறு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க


பிறந்தநாளில் லவ் ப்ரபோஸ்..காதலரை அறிமுகம் செய்த அமலா பால்.. வைரலாகும் வீடியோ..!


நடிகை அமலா பாலுக்கு அவரது பிறந்தநாளில் அவரது நண்பர் லவ் ப்ரபோஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  கேரளாவை சேர்ந்த அமலாபால் 2010 ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு  அறிமுகமான நிலையில், 2011 ஆம் ஆண்டு வெளியான மைனா படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் படிக்க


லியோ படம் வேறு வழியில்லாமல் திரையிட்டுள்ளோம்.. லாபமே இல்லை.. திருப்பூர் சுப்பிரமணியம் விமர்சனம்..!


லியோ படத்தை வேறு வழியில்லாமல் திரையிட்டுள்ளதாகவும், இதில் எங்களுக்கு லாபம் இல்லை எனவும் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.  கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி உலகமெங்கும்  செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள லியோ படம் தியேட்டரில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ஹீரோவாக “தளபதி” விஜய்யும்,  ஹீரோயினாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். மேலும் படிக்க


பேய் பட ரசிகர்கள் பாப்கார்னோட ரெடியாகுங்க.. ஓடிடியில் வெளியான ‘சந்திரமுகி 2’!


ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் நடித்த சந்திரமுகி 2 படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 படம் கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரஜினி, நயன்தாரா, ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தை  தொடர்ந்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. இதில் ராதிகா, வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன் என பலர் நடித்திருந்தனர். மேலும் படிக்க


இந்த மாசமே ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கு நிச்சயதார்த்தம்! குவியும் வாழ்த்துகள்!


தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக கலைஞராக விளங்குபவர் நடிகர் அர்ஜுன். பெரும்பாலன அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்து வந்ததால் அவர் ஆக்ஷன் கிங் என்ற அடைமொழியோடு அழைக்கப்படுகிறார்.  மேலும் படிக்க


உங்கள உயிருக்கு உயிரா காதலிச்சிருப்பேன்.. வனிதாவிடம் பேசிய பிரதீப் ஆண்டனி.. வைரலாகும் வீடியோ!


பிக்பாஸ் தமிழ் 7ஆவது சீசன் 25 நாட்களைக் கடந்துள்ளது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 7ஆவது சீசன் 25வது நாளை எட்டியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். மேலும் படிக்க