சுதா கொங்காரா சூர்யா கூட்டணி


த்ரோகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சுதா கொங்காரா. தனது முதல் படத்தின் தோல்வியைத் தொடர்ந்து மாதவனை வைத்து இரண்டாவது படமாக இறுதிச் சுற்று படத்தை இயக்கினார். தமிழ், இந்தி ஆகிய இரு மொழியிலும் பெரும் வெற்றிபெற்ற இந்தப் படத்தைத் தொடர்ந்து தனது மூன்றாவது படமான சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுடன் இணைந்தார். இப்படம் 5 தேசியவிருதுகளைக் குவித்து தமிழ் சினிமாவின் பெரும் ஹிட் படமாக உருவெடுத்தது.


இந்நிலையில், சூர்யா 43 படத்தில் மீண்டும் சுதா கொங்கரா சூர்யாவுடன் கைக்கோர்த்துள்ளார்.


நடிகர்கள்


இப்படத்தில்  சூர்யாவுடன் பல்வேறு நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். நடிகர் துல்கர் சல்மான் இந்தப் படத்தில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.


இதைத் தொடர்ந்து  நீண்ட நாட்கள் தமிழ் சினிமாவுக்கு ப்ரேக் விட்டிருந்த நடிகை நஸ்ரியா இந்தப் படத்தில் ரீ எண்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியது. மேலும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க, ஜி. வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் நூறாவது படம் சூர்யா 43 என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூர்யா 43 படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது . இந்தப் படத்திற்கு புறநானூறு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் முழுப்பெயர் வெளியிடப்பட்டாமலே இந்த முன்னோட்ட வீடியோ சர்பென்ஸ் வைத்துள்ளது.