நடிகை அமலா பாலுக்கு அவரது பிறந்தநாளில் அவரது நண்பர் லவ் ப்ரபோஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


கேரளாவை சேர்ந்த அமலாபால் 2010 ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு  அறிமுகமான நிலையில், 2011 ஆம் ஆண்டு வெளியான மைனா படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதன்பின்னர்  தெய்வதிருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி?, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலை இல்லா பட்டதாரி, பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி 2, திருட்டுப்பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன், ஆடை ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் கடாவர் என்ற வெப் சீரிஸிலும் அமலா பால் நடித்திருக்கிறார். 


தற்போது அமலா பால், தமிழில் அதோ அந்த பறவைப் போல படத்தில் மட்டுமே அவர் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் ஆடுஜீவிதம் படத்திலும் நடித்து வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை, தலைவா படத்தின் போது இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் காதல் ஏற்பட்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே இந்த தம்பதியினர் பிரிந்தனர். இதனிடையே மீண்டும் அமலா திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் பரவிய நிலையில் அவர் அதனை உறுதிப்படுத்தவில்லை. 


அதேசமயம் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அமலா பால், சமீபகாலமாக வெவ்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். 






இப்படியான நிலையில் இன்று அமலா பால் தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் அமலா பாலின் நெருங்கிய நண்பராக ஜனா தேசாய் என்பவர் அவருக்கு லவ் ப்ரபோஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் நடனமாடி அவருக்கு முட்டி போட்டு ப்ரபோஸ் செய்து மோதிரம் மாட்டி விடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. காதலை ஏற்றுக்கொண்ட அமலா பால், ஜனா தேசாய்க்கு லிப் கிஸ் கொடுக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளது. விரைவில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.