பிக்பாஸ் 7 தமிழ்
பிக்பாஸ் தமிழ் 7ஆவது சீசன் 25 நாட்களைக் கடந்துள்ளது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 7ஆவது சீசன் 25வது நாளை எட்டியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். முதல் வார எலிமினேஷனில் அனன்யா ராவ் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் பவா செல்லதுரை தன் விருப்பத்தின் பேரில் பிக்பாஸ் வீட்டில் இந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
ஓபன் எலிமினேஷன்
தற்போது பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா, மாயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, விசித்திரா, யுகேந்திரன், கூல் சுரேஷ், நிக்ஸன், விஷ்ணு, சரவண விக்ரம் உள்ளிட்டவர்கள் நடுவில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. பூர்ணிமா இந்த வார கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஓபன் நாமினேஷன் இந்த வாரம் தொடங்கியதில் பலரும் மாயா, பிரதீப், ரவீனா மற்றும் மணியை நாமினேட் செய்துள்ளனர்.
பிரதீப் சொன்ன வார்த்தையால் அழுத ஜோவிகா
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் இருவரின் வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட இரண்டு வீடியோக்களை பார்த்து, அதில் யாருடைய வீடியோ பிடித்திருந்தது என நினைப்பவருக்கு லைக்கும், பிடிக்காதவருக்கு டிஸ்லைக்கும் கொடுக்க வேண்டும். அதில் பிரதீப், ஜோவிகா வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட வீடியோக்களை பார்த்துவிட்டு வெளியே வந்து ஜோவிகாவிடம் லைக் கொடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜோவிகா கண் கலங்கி அழும் ப்ரோமோ வெளியாகி இருந்தது. தற்போது கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் உள்ளே வந்த பிரதீப் மற்றும் வனிதா ஆகிய இருவருக்கும் இடையில் நடந்த உரையாடல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
உயிருக்கு உயிராக காதலிச்சிருப்பேன்
தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில் வனிதா விஜயகுமாரிடம் பிரதீப் ஆண்டனி “உங்களுக்கு மட்டும் கல்யாணம் ஆகாம இருந்து நீங்க சின்ன பொண்ணா இருந்திருந்தா நான் நிச்சயமாக உங்களை காதலித்திருப்பேன்” என்று கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தனது நண்பர் கவின் பிக்பாஸ் வீட்டில் பயன்படுத்தும் காதல் உத்திகள் அனைத்தும் தன்னுடைய உத்திகள் என்றே அவர் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து “பெண்களை காதலில் விழவைக்க தனியாக ஸ்ராடஜி எல்லாம் பயண்படுத்துகிறாயா” என்று திருப்பி கேட்கிறார். கலகலப்பான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பிக்பாஸ் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.