Vetrimaran: "300 தயாரிப்பாளர் 150 நடிகர்களுக்கு கதை சொல்லியிருக்கேன்.." முதல் படத்திற்கு முன் இயக்குநர் வெற்றிமாறன்!


பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியவர் இயக்குநர் வெற்றிமாறன். ஆடுகளம் , விசாரணை, அசுரன், வடசென்னை, விடுதலை என தன்னுடைய 16 ஆண்டுகால இயக்குநர் வாழ்க்கையில் அவர் இயக்கியப் படங்கள். இயக்குநராக மட்டுமின்றி கிராஸ் ரூட் ப்ரோடக்‌ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார் வெற்றிமாறன். இந்திய சினிமாவின் முகத்தை மாற்றியவர்கள் மிக முக்கியமான ஒருவராக கருதப்படுகிறார் வெற்றிமாறன். மேலும் படிக்க


Selvaraghavan: நாடு தோற்பதை பார்க்க முடியவில்லை.. நெஞ்சம் உடைந்து சிதறியது.. செல்வராகவன் கண்ணீர் மல்க பதிவு!


நேற்றைய உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோற்றதால் தான் மிகவும் அழுததாகவும், தன் நெஞ்சம் உடைந்து சிதறியதாகவும் செல்வராகவன் (Selvaraghavan) பதிவிட்டுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ளது. உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பல்வேறு இந்திய திரைப் பிரபலங்கள் என பலரும் நேரில் சென்று இந்திய அணியை ஊக்குவித்தனர். மேலும் படிக்க


Jigarthanda Double X: 'இது படம் அல்ல பாடம்’ .. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கு பாராட்டு மழை பொழிந்த சீமான்..


ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பாராட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகப்பெரிய பாராட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் நடித்த “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படம் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியானது. இந்த படத்தில் ஷைன் டாம் சாக்கோ, இளவரசு,நவீன் சந்திரா, சந்திரா நடராஜன், சத்யன், அரவிந்த் ஆகாஷ், பவா செல்லதுரை, விது, கபிலா வேணு என பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல பாராட்டைப் பெற்றுள்ளது.மேலும் படிக்க


Bigg Boss 7 Tamil: அந்த 3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் இவங்களா? நிக்சனுக்கு காத்திருக்கும் ஆப்பு - பிக்பாஸ் வைத்துள்ள ட்விஸ்ட் என்ன? 


பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கானா பாலா குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற தற்போது 14 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர். 18 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் மேலும் 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக அதிரடியாக என்ட்ரி கொடுத்து ஒட்டுமொத்த பிக் பாஸ் கேமையே மாற்றினார்கள். மேலும் படிக்க


Ethirneechal: குணசேகரனை மிரட்டிய ஜனனி.. அப்பத்தாவின் மரணத்தில் இருக்கும் மர்மம் என்ன? எதிர்நீச்சலில் பரபரப்பு!


சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலில் இதுவரையில் பேச்சு மூச்சு இல்லாத அப்பத்தாவை காரில் குணசேகரன் மற்றும் தம்பிகள் அழைத்துச் செல்லும் போது எதிர்பாராதவிதமாக கார் எரிந்து அப்பத்தா மட்டும் உடல் கருகி இறந்து போகிறார். அப்பத்தா விபத்தில் உயிரிழந்ததை வீட்டில் உள்ள பெண்களும் சக்தியும் சிறிதும் நம்பவில்லை. இது அனைத்தும் குணசேகரன் பிளான் தான் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். மேலும் படிக்க