டிரை ஃப்ரூட்ஸ் ஆர்டர் செய்து ஏமாற்றம் 


புதுச்சேரியைச் சேர்ந்த பெண் இணையத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து குறைந்த விலையில் உலர் பழங்கள் (டிரை ஃப்ரூட்ஸ்) கிடைக்கிறது என்பதை நம்பி 18000 ரூபாய்க்கு ஆர்டர் செய்து கடந்த 15 நாட்களாக பொருள் வரவில்லை என்று புகார் அளித்துள்ளார் .


OTP கேட்டு மோசடி 


உங்களுடைய கிரெடிட் கார்டின் கடன் வாங்கும் தொகையை அதிகரித்து தருகிறோம் என்று பேசி, வருகின்ற ஓடிபி சொல்லுங்கள் என்று சொல்லி OTP சொன்னவுடன்  கிரெடிட் கார்டில் 27 ஆயிரம் ரூபாய் பொருளை இணை மோசடிக்காரர்கள் வாங்கி அவரை ஏமாற்றி உள்ளனர்.


விளம்பரத்தை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற்றம் 


மார்க்கெட் மதிப்பில்  4 லட்சம் ரூபாய் விலை உடைய ஹைட்ராலிக் லிப்டிங் மிஷினை ஒரு லட்சத்தி 75 ஆயிரம் ரூபாய்க்கு தருகிறோம் என்று இணையவழியில் வந்த விளம்பரத்தை நம்பி பணத்தை செலுத்தி 10 நாட்களாக பொருள் மற்றும் எந்த தகவலும் இல்லை என்று புகார் அளித்துள்ளார்


முதலீடு


புதுச்சேரியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் இணைய வழியில் முதலீடு செய்தால் நாள் ஒன்றுக்கு 20 சதவீதம் உங்களுக்கு வருமானம் தருகிறோம் என்று சொன்னதை நம்பி பல்வேறு வங்கி கணக்கில் ஒன்பது லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பிய பிறகு அவர்களிடம் இருந்து எந்த வருமானம் வரும் இல்லை அனுப்பிய பணத்தையும் எடுக்க முடியவில்லை என்று புகார் கொடுத்துள்ளனர். மேற்கண்ட புகார் சம்பந்தமாக இணைய வழி காவல் ஆய்வாளர்கள் கீர்த்தி மற்றும் கார்த்திகேயன் விசாரணை செய்து வருகின்றனர்.


இணையவழி காவல்துறை மீண்டும் மீண்டும் எச்சரிக்கை:


இதுபற்றி இணைய வழி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கூறுகையில், பெரும்பாலான சமூக வலைதள குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்கள் தங்கள் உறவினர்களால் அல்லது அவர்களுடைய மிக நெருங்கிய நபர்களால் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ எடுக்கும் பொழுதோ அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது  எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தி உள்ளார். புதியதாக துவக்கப்பட்ட இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் உள்ள பல்வேறு விலை உயர்ந்த புதிய மென்பொருள்கள் (new upgraded software) மூலம் இது போன்ற அனைத்து விதமான குற்றங்கள் செய்தவர்களை கண்டுபிடித்து விட முடியும், மேலும் இது போன்ற குற்றங்கள் அனைத்துமே ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களாக இருப்பதால், தவறான நடக்கவடிக்கைகள் ஈடுபடுவோர் தப்ப முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மேலும், இணைய வழியில் வருகின்ற எந்த விளம்பரத்தையும் நம்பி பணத்தை செலுத்த வேண்டாம் வேலைவாய்ப்பிற்கு பணம் செலுத்த வேண்டாம். முக்கியமாக சந்தை மதிப்பில் இருக்கின்ற பொருட்களை சந்தை மதிப்பை விட மிகவும் விலை குறைவாக கொடுப்பதாக வருகின்ற விளம்பரங்களை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம். பல்வேறு முக்கிய நிறுவனங்களின் பெயர்களில் படிப்பு வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கு 100 ரூபாய் அல்லது 500 ரூபாய் பணம் செலுத்தி எங்களுடைய அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து அனுப்புங்கள் என்றெல்லாம் நிறைய விளம்பரங்கள் இணைய வழியில் வந்து கொண்டிருக்கிறது அது போல் எதையும் நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை செய்கிறார்.