பிக் பாஸ் 7 நிகழ்ச்சி ஏற்கனவே மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சூழலில் மேலும் ஒரு ட்விஸ்டை வைத்துள்ளார் பிக் பாஸ். இதனால் பீதியில் உறைந்து இருக்கிறார்கள் பிக் பாஸ் வீட்டில் தற்போது இருக்கும் 14 போட்டியாளர்கள். 


பிக்பாஸ்:


பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கானா பாலா குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற தற்போது 14 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர். 18 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் மேலும் 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக அதிரடியாக என்ட்ரி கொடுத்து ஒட்டுமொத்த பிக் பாஸ் கேமையே மாற்றினார்கள். 


 



வைல்ட் கார்டு போட்டியாளர்கள்:


பிக் பாஸ் நிகழ்ச்சியில் 50வது நாளான இன்று பிக் பாஸ் வைத்த ட்விஸ்டின் அடிப்படையில் மேலும் 3 வெளியேற்றப்பட்ட எக்ஸ் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக என்ட்ரி கொடுக்க உள்ளனர் என தெரிவித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்வதற்கு இந்த வாரம் நடைபெற இருக்கும் டாஸ்குகளில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர் 14 பிக் பாஸ் போட்டியாளர்கள். இல்லையேல் அவர்கள் வெளியேற்றப்பட்டு வைல்ட் கார்டு போட்டியாளர்களாக உள்ளே என்ட்ரி கொடுக்கும் எக்ஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் தொடர்வார்கள் என்பது பிக் பாஸின் அறிவிப்பு. 


அந்த வகையில் எந்தெந்த எக்ஸ் போட்டியாளர்கள் என்ட்ரி கொடுக்க உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி என்ட்ரி கொடுக்க இருக்கும் போட்டியாளர்களின் பெயர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. வினுஷா தேவி, விஜய் வர்மா மற்றும் அனன்யா தான் அந்த எக்ஸ் போட்டியாளர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


வினுஷா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுப்பதால் வினுஷா குறித்து நிக்சன் உருவ கேலி செய்ததாக எழுந்த சர்ச்சை மீண்டும் பூதாகாரம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வாரம் மிகவும் பெரிய பிரச்சினை நடக்கப் போகிறது என்பது மட்டும் தெரிகிறது. 


 


ட்விஸ்ட்:


சென்ற வாரம் வரையில் நிக்சன் - ஐஷு சர்ச்சை பரபரப்பாக நகர்ந்த  நிலையில், ஐஷு கடந்த வாரம் வெளியேறினார். ஐஷுவுக்கு பிறகு தற்போது வினுஷா என்ட்ரி கொடுத்து நிக்சனை வைத்து செய்யப்போகிறார்  என மிகவும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள். 


அனன்யா இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். அதனால் அவர் மீண்டும் என்ட்ரி கொடுப்பதால் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி போட்டியில் தொடர்வதற்கான முயற்சிகளை எடுப்பார் என்றும் கணிக்கப்படுகிறது. பொறுத்து இருந்து என்னென்ன ட்விஸ்ட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற போகிறது என்பதை பார்க்கலாம்.