வெற்றிமாறன்


பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியவர் இயக்குநர் வெற்றிமாறன். ஆடுகளம் , விசாரணை, அசுரன், வடசென்னை, விடுதலை என தன்னுடைய 16 ஆண்டுகால இயக்குநர் வாழ்க்கையில் அவர் இயக்கியப் படங்கள். இயக்குநராக மட்டுமின்றி கிராஸ் ரூட் ப்ரோடக்‌ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார் வெற்றிமாறன். இந்திய சினிமாவின் முகத்தை மாற்றியவர்கள் மிக முக்கியமான ஒருவராக கருதப்படுகிறார் வெற்றிமாறன்.


வெற்றிமாறனின் வாழ்க்கை


திரைப்படங்களைத் தவிர்த்து வெற்றிமாறன் தான் உதவி இயக்குநராக இருந்த காலத்தைப் பற்றியக் கதைகளை ரசிகர்கள் மிக ஆர்வமாக கேட்டுவருகிறார்கள். ஆனந்த விகடனில் அவர் எழுதிய மைல்ஸ் டூ கோ என்கிறத் தொடர் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட வெற்றிமாறன் முதல் படத்தை எடுப்பதில் இருக்கும் சவால்களைப் பற்றி பேசினார்.


300 தயாரிப்பாளர்கள்:


” நான் என்னுடைய முதல் படத்தை என்னுடைய 32 வயதில் இயக்கினேன். அதன்படி நான் என்னுடைய  முதல் படத்தை இயக்குவதற்கு எனக்கு 32 வருட அனுபவம் தேவைப் பட்டிருக்கிறது. நான் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் என் நண்பர்களிடம் என்னிடம் இரண்டாவது படத்திற்கான கதைகூட இருக்கிறது. ஆனால் முதல் படத்திற்கான கதை இல்லை என்று சொல்வேன். என்னுடைய முதல் படத்தை இயக்குவதற்கு முன் நான் சுமார் 300 தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லியிருக்கிறேன், கிட்டதட்ட 150 நடிகர்களிடம் கதை சொல்லியிருக்கிறேன்.  நாங்கள் எல்லாம் சேர்ந்து சுமார் ஒரு 1000 கதை வைத்திருந்தோம். அதை நாங்கள் பார்க்கும் ஒவ்வொருவரிடமுன் சொல்லிக் கொண்டிருப்போம். நமக்கு முதல் படம் எடுப்பதற்கு கிடைக்கும் நேரம் இரண்டாவது படத்தில் இருந்து நமக்கு கிடைக்காது. 


இந்த கதைகளை எல்லாம் கேட்டு ஒவ்வொருவர்  நிறைய கருத்துக்களை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இந்த கருத்துக்கள் எல்லாம் சேர்ந்து எந்த மாதிரியான கதையை முதல் படத்திற்கு தேர்வு செய்ய வேண்டும் என்று நான் தெரிந்துகொண்டேன். நம்முடைய படம்  நன்றாக இருந்தால் அதைப் பார்த்து நம் கதை நன்றாக இல்லை என்று சொன்னவர்கள் கூட நம்மிடம் திரும்பி வருவார்கள். அப்போது அந்த்  வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . பஸ் கிடைக்கும்போது தான் அதில் ஏற முடியும் . பஸ் கிளம்பிப் போனப் பிறகு வருவதில் எந்த பயனும் இல்லை. உங்களுடைய முதல் படத்திற்கு கிடைக்கும் காலம் உங்களுடைய இரண்டாவது படத்திற்கு நிச்சயமாக கிடைக்காது. அந்த குறைவான நேரத்தில் உங்களால் எவ்வளவு செய்ய முடிகிறதோ அதை செய்துவிட வேண்டும்” என்று வெற்றிமாறன் கூறியுள்ளார்