சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலில் இதுவரையில் பேச்சு மூச்சு இல்லாத அப்பத்தாவை காரில் குணசேகரன் மற்றும் தம்பிகள் அழைத்துச் செல்லும் போது எதிர்பாராதவிதமாக கார் எரிந்து அப்பத்தா மட்டும் உடல் கருகி இறந்து போகிறார். அப்பத்தா விபத்தில் உயிரிழந்ததை வீட்டில் உள்ள பெண்களும் சக்தியும் சிறிதும் நம்பவில்லை. இது அனைத்தும் குணசேகரன் பிளான் தான் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.


 




அப்பத்தாவின் விபத்துக்கு காரணம் ஜீவானந்தம் தான் என அவரை போலீஸ் கைது செய்கிறது. அப்பத்தாவின் இறப்பு வீட்டில் உள்ள அனைவரையும் புரட்டி போட்டுவிட்டது. குணசேகரன் மீது கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் அவருக்கு எதிராக இருப்பவர்கள். ஆத்திரம் தாங்காமல் சக்தி, ஜீவானந்தம் மனைவியின் மரணத்திற்கு குணசேகரன் தான் காரணம் என்பதை போட்டு உடைகிறான். அதைக் கேட்டு ஞானமும் விசாலாட்சி அம்மாவும் அதிர்ச்சி அடைந்தாலும் அந்த உண்மையை நம்ப மறுக்கிறார்கள். இது தான் கடந்த வாரம் வரையில் எதிர்நீச்சலில் ஒளிபரப்பான கதைக்களம்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


ராமேஸ்வரம் சென்று அப்பத்தாவின் அஸ்தியைக் கரைக்க சென்றதாக சொல்லப்பட்ட குணசேகரன் வீட்டுக்கு வருகிறார். விசாலாட்சி அம்மாவின் தம்பி அப்பத்தா மரணம் குறித்து கேள்விப்பட்டு வீட்டுக்கு வருகிறார். அனைவருக்கும் முன்னிலையில் "இது கடவுள் போட்ட கணக்கு மாதிரி தெரியல. மனுஷன் போட்ட கணக்கு மாதிரி தான் தெரியுது" என சொன்னதும் ஞானம் அதிர்ச்சி அடைகிறான். பெண்கள் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.


 




குணசேகரன் வந்ததும் விசாலாட்சி அம்மா அவரிடம் "கூட பொறந்தவன்னு கூட நினைக்காம பழியை தூக்கி போடுகிறான்" என சக்தியை பற்றி சொல்ல "அம்மா நான் பேசினது பூராவே நிஜம்" என சக்தி மீண்டும் அதையே சொல்கிறான். அதை அப்படியே கேட்டுக் கொண்டு நிற்கிறார் குணசேகரன்.

பின்னர் அப்பத்தாவின் போட்டோவுக்கு ஞானத்தை விட்டு மாலை போட சொல்கிறார். அதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த ஜனனி "இதெல்லாம் நடத்த கூடாது. அதையும் மீறி இதெல்லாம் பண்ணீங்கன்னா, நான் வேற மாதிரி ஆக்ஷன் எடுப்பேன்" என அதிரடியாக குணசேகரனை எதிர்த்து பேசுகிறாள். ஜனனி பேசியதைக் கேட்டு விசாலாட்சி அம்மா அவளைப் பார்த்து முறைக்கிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.


 





அப்பத்தாவின் மரணத்திற்கு பின்னால் இருக்கும் மர்மம் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள். ஜீவானந்தம் ஈஸ்வரியிடம் சொன்னது போல அவளைத் தேடி என்ன ஒரு பொறுப்பு வரப்போகிறது என்பது ஒரே சஸ்பென்சாக இருக்கிறது. இனி வரும் எபிசோடுகளில் அதற்கான விடை தெரிய வரும் என்பதால் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.