இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில்,நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ள ’விக்ரம்’ படம் நாளை (ஜூன்.03) உலகம் முழுவதும் வெளியாகிறது.
பிரபாஸ் - லோகேஷ் கூட்டணி
இந்நிலையில், முன்னதாக பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் - லோகேஷ் கனகராஜ் இருவரும் அடுத்த படத்தில் இணைவதற்காக பேச்சு வார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும், லோகேஷின் கதையில் பிரபாஸுக்கு திருப்தி ஏற்படாததாகவும், வேறு கதை தயார் செய்து கூறும்படி லோகேஷிடம் பிரபாஸ் கேட்டதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.
இதையும் படிங்க: Singer KK Tamil Songs: "ஸ்ட்ராபெரி கண்ணே முதல் அப்படிப்போடு வரை".. எல்லாமே அவர் குரல்.. தமிழுக்கு கிடைத்த வைரம் கே.கே
தொடர் தொல்வி...
பாகுபலி 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய இரண்டு படங்களும் பான் இந்தியா படங்களாக ரிலீஸ் ஆகி பெரும் தோல்வியைத் தழுவியுள்ளன. இந்நிலையில் தன் அடுத்தடுத்த கதைத் தேர்வுகளில் பிரபாஸ் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ’சலார்’ படம் மீண்டும் பிரபாஸுக்கு வெற்றியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம் 3...
மறுபுறம், லோகேஷ் நடிகர் கமல்ஹாசனுடன் முழு வீச்சில் படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். விக்ரம் இசை வெளியீட்டு விழாவின்போது இப்படத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், படத்தின் அடுத்த பாகம் சூர்யாவின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு வெளிவரலாம் என்ற தகவல்களும் வெளிவந்தபடி உள்ளன.
இதையும் படிங்க: 'மாநாடு’ கல்யாணியின் அம்மா ஒரு பிரபல ஹீரோயின்.. தெரியுமா? விண்டேஜ் ’விக்ரம்’ லிஸி சொன்ன ஃப்ளாஷ்பேக்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்