பிரபல பாலிவுட் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்(Krishnakumar Kunnath) - KK என பிரபலமாக அறியப்பட்டவர். அவருக்கு வயது 53. நேற்று இரவு கொல்கத்தாவில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல பிரபலங்கள் பாடகர் KKக்கு சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 


பன்முகப் மொழிகளில் பாடும் வல்லமை பெற்ற கேகே, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். இந்தநிலையில் அவர் தமிழில் பாடிய பாடல்கள் பட்டியல் என்ன என்பதை கீழே காணலாம். 


ஸ்டாபெர்ரி கண்ணே : 


ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'மின்சார கனவு' படத்தில் இடம்பெற்ற 'ஸ்ட்ராபெர்ரி கண்ணே' என்ற பாடலை கே.கே, ஃபெபி மணியுடன் இணைந்து பாடியிருப்பார்.


காதல் வளர்தேன் :


"மன்மதன்' படத்தில் இடம்பெற்ற 'காதல் வளர்தேன்' அந்த நேரத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த குரலுக்கு சொந்தகாரர் கேகேதான். யுவன் - கே.கே - நா.முத்துக்குமார் காம்போவின் வெளிவந்த மிகச்சிறந்த பாடல். 


நீயே நீயே : 


ஜெயம் ரவி நடித்து மிகப்பெரிய ஹிட்டான 'எம்.குமரன் - சன் ஆஃப் மகாலட்சுமி'. வாலியின் வரிகளில் கே.கே.வின் குரலில் வெளியான 'நீயே நீயே' பாடல் இன்றும் பலருக்கு கண்ணீர் வரவைக்கும். 


காதலிக்கும் ஆசையில்லை :


ஹாரிஸ் ஜெயராஜின் மிகப்பெரிய ஹிட் பாடல்களில் ஒன்று 'காதலிக்கும் ஆசையில்லை', அந்த குரலும் கே.கேவின் குரல்தான். 


அப்படிப்போடு :


நடிகர் விஜய் நடிப்பில் 'கில்லி' படத்தின் 'அப்படிப்போடு' பாடலை இன்றும் தமிழ்நாடே கொண்டாடி வருகிறது. அப்படிப்பட்ட பாடலை பாடி நம்மை மகிழ்வித்தது கேகே என்னும் மாபெரும் கலைஞன். 


உயிரின் உயிரே :


'காக்க காக்க' படத்தின் 'உயிரின் உயிரே' கே.கே.வின் குரல் உள்ளத்தில் இன்றும் அதிர்வுகளை உண்டாக்கும்.


7/G ரெயின்போ காலனி' படத்தில் இடம்பெற்ற 'நினைத்து நினைத்து' பாடலை பாடி நம் கண்களை ஈரமாக்கிய குரல் கேகேவின் குரல்தான். 



மேலும், சாமி படத்தில்  'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, 'குட்டி' படத்தில் வரும் 'Feel My Love' ,'ஆதி' படத்தில் 'லேலக்கு லேலக்கு லேலா', '12B' படத்தில் ஹாரிஸ் இசையில் 'எங்கேயோ போகின்ற மேகம் நிக்குது' பாடலையும், 'லவ் பண்ணு' (ஒரு புன்னகைப் பூவே) பாடலையும் கே.கே-வே பாடியிருப்பார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண