1986 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை லிஸ்சி. மலையாள நடிகையான லிஸ்சி கேரளாவில் மிக பிரபலமான நடிகை என்றாலும் கூட தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. அதன் பிறகு இயக்குநர் பிரியதர்ஷனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார் லிசி . ஆனாலும் 80-களில் நடித்த நடிகர் நடிகைகளுடன் இன்னும் தொடர்பில் இருக்கிறார். அவர்களுடன் கேதரிங்ஸ் போன்ற நிகழ்சிகளை இவர் ஒருங்கிணைப்பதும் வழக்கம்தான். லிஸ்சிக்கு இரண்டு குழந்தைகள் . அதில் பெண் குழந்தை நம்மில் பலருக்கு பரீட்சியம் . மாநாடு திரைப்படத்தில் , சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தாரே கல்யாணி பிரியதர்ஷன்.
அவர் லிஸ்சியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. லிஸ்சி சென்னையில் டப்பிங் ஸ்டூடியோ நடத்தி வருகிறார், அங்குதான் விக்ரம் 2 படத்திற்கான டப்பிங் எடுக்கப்பட்டது. அது குறித்தும் , முதல் பாகம் எடுக்கப்பட்டது குறித்தும் பகிர்ந்திருக்கிறார் லிஸ்சி.
அதில் ”விக்ரம் படம் எடுத்து 33 வருடங்கள் ஆச்சுனுதான் நான் எப்போதுமே சொல்லுவேன். ஆனால் படம் எடுத்து 37 வருடங்கள் ஆச்சுனு கமல் சார் சரியா சொல்லுவாங்க, காரணம் அந்த படம் கிளைமேக்ஸ் எடுத்த சமயத்தில்தான் ஸ்ருதி , அவங்க முதல் பொண்ணு பிறந்தாங்க.தமிழ்ல விக்ரம்தான் என் முதல் தமிழ் படம். அந்த காலக்கட்டத்துல நான் நினைக்கவே இல்ல இந்த படத்தின் தொடர்ச்சியை இவ்வளவு காலம் கழித்து எடுப்பாங்கனு .எனக்கு இரண்டாம் பாகத்துல ஒரு சீன் கொடுக்கவில்லை அப்படினு வருத்தம், முதல் பாகமே அதிக பொருட்செலவுல, மிகப்பெரிய காஸ்ட்டோட எடுத்தாங்க.நாம் கமல் சாராட தீவிர ரசிகை.
அவருடைய புகைப்படங்களை எல்லாம் என்னோட விடுதியில ஒட்டி வச்சுருந்தேன். ஸ்கூல் கட் அடிச்சுட்டு அவர் படம் பார்க்க போவேன்.டெக்னிக்கலி அவர் ரொம்ப சிறந்தவர். நான் விக்ரம் 2 படத்தில் நடிக்கவில்லை என்றாலும் கூட எனது டப்பிங் தியேட்டர்லதான் அவங்க ஷூட் பண்ணாங்க. நான் முதல் படத்தின் நாயகி என்பதால இதை பயன்படுத்தவில்லை. நானா கேட்டாலும் அது தப்பாயிடும். அது கமல் சாரின் முடிவும் கிடையாது. இது முழுக்க முழுக்க இயக்குநர் லோகேஷின் முடிவு. கமல்சார் இறுதியாகத்தான் டப்பிங் பேச வந்தார். நிறைய விசாரிச்சுட்டுதான் இங்க வந்தாங்க. இந்த டப்பிங் ஸ்டூடியோவின் ஒரு பகுதியை கமல்சார்தான் தொடங்கி வச்சாரு” என்றார் லிசி.