Actor Suriya: சாப்பாடு ஊட்டி விட்டார்.. விஜயகாந்தைப்போல யாரும் இல்லை ; கண்ணீர் மல்க பேசிய நடிகர் சூர்யா


நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். அவரது மறைவு திரையுலகினர், பொதுமக்கள் என அனைவருக்கும் மிகப்பெரிய இழப்பாக மாறியுள்ளது. விஜயகாந்த் மறைவின் போது முன்னணி திரைப்பிரபலங்கள் பலரும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகவும், ஷூட்டிங்கிற்காகவும் வெளிநாடு சென்றிருந்தனர். இதனால் அவரின் இறுதிச்சடங்கின்போது பங்குபெறாத நிலை ஏற்பட்டது. மேலும் படிக்க


Vijay Sethupathi: விடாமல் துரத்தும் கிரிமினல் வழக்கு.. விசாரணையை எதிர்கொள்ள விஜய்சேதுபதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்


கடந்த 2021-ஆம் ஆண்டு விஜய் சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில் ஒரு இளைஞர் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் துணை நடிகர் மகா காந்தி என்பது  தெரிய வந்தது. இதனையடுத்து சென்னை சைதாப்பேட்டை விமான நிலையத்தில் விஜய் சேதுபதி மீது மகா காந்தி வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், “2021 ஆம் ஆண்டு நவம்பரில் விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் சந்தித்த போது என்னை இழிவுப்படுத்தி தாக்கினார். அவர் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என தெரிவித்திருந்தார். மேலும் படிக்க


Captain Miller: தனுஷ் ரசிகர்களே ரெடியா இருங்க.. கேப்டன் மில்லர் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு..!


தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட நடிகர்களின் ஒருவர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாத்தி படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.  அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தொடரி, பட்டாஸ், மாறன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷூடன் சத்யஜோதி நிறுவனம் இணையும் நான்காவது படம் இது என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கேப்டன் மில்லர் படத்துக்கு நிலவுகிறது. மேலும் படிக்க


Actor Karthi: சின்னத்திரைக்கு வரும் கார்த்தி.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி


2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே நாம் அனைவருக்கும் தொடர் விடுமுறைகள் தான் நியாபகம் வரும். குடும்பத்துடன் இணைந்து  பெரும் பொங்கல், மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் என வகை வகையாக பொங்கல் பண்டிகையானது கொண்டாடப்படும். அதேசமயம் புதுப்படங்கள் இல்லாத பண்டிகையா என்னும் அளவுக்கு இந்த முறை முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வரிசை கட்டி இருக்கின்றன. மேலும் படிக்க


This week OTT release: இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் என்னென்ன? - முழு விபரம் இதோ..!


திரையரங்கு ரிலீஸுக்கு பின்னர் எந்த படமாக இருந்தாலும் அது ஓடிடியில் வெளியாவதால் ரசிகர்களுக்கு டபிள் ட்ரீட்டாக இருந்து வருகிறது. எவ்வளவு பெரிய ஸ்டார் நடிகரின் படமாக இருந்தாலும் படம் திரையரங்கில் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு எத்தனை முறை வேண்டுமானாலும் காணும் வசதி உள்ளதால் ரசிகர்கள் இந்த முறையை மிகவும் விரும்புகிறார்கள். அதனால் ஓடிடியின் வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. அதனால் ஓடிடி தளங்களும் போட்டிபோட்டு கொண்டு படங்களை வெளியிடும் உரிமைகளை பெற்று வருகிறார்கள். மேலும் படிக்க