திரையரங்க ரிலீஸுக்கு பின்னர் எந்த படமாக இருந்தாலும் அது ஓடிடியில் வெளியாவதால் ரசிகர்களுக்கு டபிள் ட்ரீட்டாக இருந்து வருகிறது. எவ்வளவு பெரிய ஸ்டார் நடிகரின் படமாக இருந்தாலும் படம் திரையரங்கில் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு எத்தனை முறை வேண்டுமானாலும் காணும் வசதி உள்ளதால் ரசிகர்கள் இந்த முறையை மிகவும் விரும்புகிறார்கள். அதனால் ஓடிடியின் வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. அதனால் ஓடிடி தளங்களும் போட்டிபோட்டு கொண்டு படங்களை வெளியிடும் உரிமைகளை பெற்று வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாகின்றன என்பதை பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்காக இந்த தகவல்...
அன்னபூரணி :
நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த டிசம்பர் 1ம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம் 'அன்னபூரணி'. இது நடிகை நயன்தாராவின் 75வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
பார்க்கிங் :
ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் டிசம்பர் 1ம் திரையரங்கில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் புத்தாண்டை முன்னிட்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி விட்டது.
ஹாய் நான்னா :
டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் நானி, மிருணாள் தாகூர் உள்ளிட்டோரின் நடிப்பில் சவுர்யா இயக்கத்தில் டிசம்பர் 7ம் தேதி பான் இந்தியன் படமாக வெளியான திரைப்படம் 'ஹாய் நான்னா'. அப்பாவுக்கும் மகளும் இடையிலான அழகான உறவை வெளிப்படுத்திய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஜனவரி 4ம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
கான்ஜுரிங் கண்ணப்பன் :
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் டிசம்பர் 8ம் தேதி வெளியான 'கான்ஜுரிங் கண்ணப்பன்' படத்தில் ஹீரோவாக சதீஷ் நடிக்க, நாசர், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், ரெஜினா, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை ஜனவரி 5ம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
கோடபொம்மாலி பிஎஸ் :
தேஜா மார்னி இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ராகுல் விஜய், வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்டோரின் நடிப்பில் கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் வரும் ஜனவரி 5ம் தேதி முதல் ஆஹா ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
தேஜஸ் :
ரோனி ஸ்க்ரூவாலா தயாரிப்பில் சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் அக்டோபர் 27ம் தேதி வெளியான திரைப்படம் 'தேஜஸ்'. நடிகை கங்கனா ரனாவத் லீட் ரோலில் போர் விமானங்களை ஓட்டும் பெண் விமானியாக நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றன. இப்படம் வரும் ஜனவரி 5ம் தேதி முதல் ஜீ 5 ஓடிடி தளத்தில் காணலாம்.