பெங்களூரு விமான நிலையத்தில் தன்னை தாக்கிய மகா காந்தி என்ற துணை நடிகர் தொடர்ந்து அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து வழக்கில் முக்கிய அறிவுரை ஒன்றை நீதிபதி வழங்கியுள்ளனர். 


கடந்த 2021 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில் ஒரு இளைஞர் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் துணை நடிகர் மகா காந்தி என்பது  தெரிய வந்தது. இதனையடுத்து சென்னை சைதாப்பேட்டை விமான நிலையத்தில் விஜய் சேதுபதி மீது மகா காந்தி வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், “2021 ஆம் ஆண்டு நவம்பரில் விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் சந்தித்த போது என்னை இழிவுப்படுத்தி தாக்கினார். அவர் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என தெரிவித்திருந்தார். 


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஜய் சேதுபதியை நேரில் ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியது. ஆனால் அவரோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘பெங்களூரு விமான நிலையத்தில் நடந்த சம்பவம் சென்னை விசாரணை எல்லைக்கு உட்பட்டது அல்ல.  இதனால் இங்கு வழக்கு தொடர இயலாது. அதேசமயம் விஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணையை நடத்தில் 3 மாதத்தில் முடிக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.  இது விஜய் சேதுபதிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. 


இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் விஜய் சேதுபதி தரப்பில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பிவி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் நடிகர் விஜய் சேதுபதிக்கு பிரபலமாக இருப்பதால் என்ன செய்ய வேண்டும் சில அறிவுரைகளை வழங்கினர். மேலும் ஈகோவை விட்டு விட்டு சமரசம் செய்ய முயற்சி செய்யுங்கள்’ என அறிவுறுத்தினார். 


ஆனால் இருதரப்பும் பரஸ்பரம் பேச்சுவாத்தை நடத்தியும் அது தோல்வியில் முடிவடைந்தது. இதனால் உயர்நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. தன் வழக்கின் மீதான விசாரணையை நடிகர் விஜய் சேதுபதி சந்திக்க வேண்டும். எந்த விவகாரமாக இருந்தாலும் விசாரணை நீதிமன்றத்தின் முன் வைக்க வேண்டும் என கூறி வழக்கை ரத்து செய்யக்கோரி விஜய் சேதுபதி தரப்பு தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.