Kay Cee Energy மற்றும் இன்ஃப்ரா லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள், தேசிய பங்கு சந்தையில் முதல்முறையாக விற்பனைக்கு வந்ததை தொடர்ந்து சாதனை படைத்துள்ளது. முதல்நாளான இன்றே பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் பெரும் ஆர்வம் காட்டினர். அடிப்படை விலையான 54 ரூபாயில் இருந்து 366.67 சதவிகிதம் உயர்ந்து ஒரு பங்கு 252 ரூபாய்க்கு விற்பனையானது.
தேசிய பங்கு சந்தையில் சாதனை படைத்த Kay Cee Energy நிறுவனத்தின் பங்குகள்:
Kay Cee Energy நிறுவனத்தின் ஐபிஓ, கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி விற்பனைக்கு விடப்பட்டது. இந்தாண்டு ஜனவரி 2ஆம் தேதி, அதன் விற்பனை நிறைவடைந்தது. 2,000 பங்குகள் ஒரு ஐபிஓ-வாக விற்பனைக்கு விடப்பட்டது. குறைந்தபட்சம் 2,000 பங்குகளை ஐபிஓ-வாக வாங்கலாம்.
ஐபிஓ விற்பனையை தொடர்ந்து, Kay Cee Energy நிறுவனத்தின் 19 லட்சத்து 60 ஆயிரம் வழக்கமான பங்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால், பங்குகளை வாங்க 206 கோடியே 28 லட்சத்து 8 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. விற்பனைக்கு விடப்பட்ட 4ஆவது நாளான இன்று நிறுவனத்தின் பங்குகள் 1,052.45 மடங்கு அதிகம் வாங்கப்பட்டுள்ளது.
Kay Cee Energy மற்றும் இன்ஃப்ரா நிறுவனம் என்பது பொறியியல், கட்டுமான (EPC) நிறுவனமாகும். பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எக்ஸ்ட்ரா ஐ வோல்டேஜ் பவர் டிரான்ஸ்மிஷன் லைன்களை இயக்குவதற்கான சேவைகளை வழங்கி வருகிறது.
உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. எரிசக்தி பயன்பாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2019 நிதியாண்டில், இந்தியாவின் மின் திறன் 356 GW ஆக இருந்து 2023 நிதியாண்டில் 416 GW ஆக அதிகரித்துள்ளது. ஜூன் 2023 வரையிலான காலகட்டத்தில், 9.55 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது. 1.2 கோடி ரூபாய் நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
தேசிய பங்குச்சந்தை நிலவரம்:
வர்த்தக நேர தொடக்கத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 516.94 அல்லது 0.78% புள்ளிகள் சரிந்து 66,285.32 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 118.75 அல்லது 0.73 % புள்ளிகள் சரிந்து 19,756.15 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிண்டால்கோ, ஜியோ ஃபினான்சியல், அதானி எண்டர்பிரைசர்ஸ், டாக்டர். ரெட்டி லேப்ஸ், எஸ்.பி.ஐ., கோல் இந்தியா, டெக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், ஜெ.எஸ்.டபுள்யூ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
ஐ.சி.ஐ.சி. வங்கி, க்ரேசியம், டி.சி.எஸ்., சிப்ளா, லார்சன், பஜாஜ் ஃபின்சர்வ், ஐ.டி.சி., எஸ்.பிலை. லைஃப் இன்சுரா, விப்ரா, அல்ட்ராடெக் சிமெண்ட், இன்ஃபோசிஸ், ஹீரோ மோட்டார்கார்ப், நெஸ்லே, இந்தஸ்லேண்ட் வங்கி, ஈச்சர் மோட்டார்ஸ், மாருதி சுசூகி, டிவிஸ் லேப்ஸ், சன் பார்மா, பாரதி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ், பிரிட்டானியா, கோடாக் மஹிந்திரா, டைட்டன் கம்பெனி, பவர்கிட் கார்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகின்றன.