Captain Miller: தனுஷ் ரசிகர்களே ரெடியா இருங்க.. கேப்டன் மில்லர் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு..!
நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட நடிகர்களின் ஒருவர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாத்தி படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தொடரி, பட்டாஸ், மாறன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷூடன் சத்யஜோதி நிறுவனம் இணையும் நான்காவது படம் இது என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கேப்டன் மில்லர் படத்துக்கு நிலவுகிறது.
Just In




ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ் , காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கேப்டன் மில்லர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் (ஜனவரி 3) கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக இயக்குநர் மாரி செல்வராஜ் பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் சிவராஜ்குமாரின் தம்பியும் கன்னட சூப்பர் ஸ்டார் களில் ஒருவருமான புனீத் ராஜ்குமார் ஆகிய இருவருக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதியில் விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் நடித்த வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம் பெற்ற ராசாவே உன்ன காணாத நெஞ்சு பாடலை பாடி தனுஷ் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி சன் டிவியில் வரும் ஜனவரி 7ஆம் தேதி பகல் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம் அன்றைய தினம் தான் கேப்டன் மில்லர் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த படம் தனுஷூக்கு கம்பேக் கொடுக்கும் வகையில் இருக்கும் என சொல்லும் அளவுக்கு கேப்டன் மில்லர் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்தும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Ilaiyaraaja: அவங்களுக்கு வரல; அதை நான் குறையா சொல்லல; நான் ஞானி கிடையாது! - ஓபனாக பேசிய இளையராஜா