நீயே ஒளி, நீதான் வழி.. சார்பட்டா 2ஆம் பாகத்துக்காக வெறித்தனமாக பயிற்சி எடுக்கும் ஆர்யா!


பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா இப்படத்தில் கபிலன் என்கிற முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். கலையரசன், பசுபதி, துஷாரா விஜயன், சஞ்சனா நடராஜன், ஜான் கொக்கன், ஷபீர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். மேலும் படிக்க


“பவதாவுடன் எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படம்” - இயக்குநர் வெங்கட் பிரபு உருக்கமான பதிவு!


மறைந்த பாடகி பவதாரணியுடன் இறுதியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தினைப் பகிர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு அவரை நினைவுகூர்ந்துள்ளார். இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணிப் பாடகியுமான பவதாரிணி (Bhavatharini) கடந்த ஜன.25ஆம் தேதி தன் 47ஆம் வயதில் உயிரிழந்தார். கல்லீரல் புற்றுநோய் 4ஆம் கட்டத்தை எட்டி முற்றிய நிலையில், கடந்த சில மாதங்களாக சிகிச்சைப் பெற்று வந்துள்ளார் பவதாரிணி. மேலும் படிக்க


உறைபனியில் உருகும் காதல்! பின்லாந்து நாட்டில் சூர்யா - ஜோதிகா: இதயங்களை அள்ளும் வீடியோ!


குழந்தைகள் வளர்ந்தபின் படங்களில் மீண்டும் பிஸியாக வலம் வரும் ஜோதிகா, தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பயண வீடியோ லைக்ஸ்களை வாரிக் குவித்து வருகிறது. உறைபனி பொழியும் ஆர்க்டிக் பகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜோதிகா, அங்குள்ள பின்லாந்து நாட்டில் கணவர் சூர்யாவுடன் பனியில் ஜாலியாக சுற்றுவது, ஹஸ்கி ஓநாய் வாகனத்தில் சவாரி செல்வது, ஐஸ் குளியல் போடுவது என இருவரும் மகிழ்ந்திருக்கும் வீடியோவினைப் பகிர்ந்துள்ளார். மேலும் படிக்க


“பெண்கள் ஃபோட்டோவை மார்ஃபிங் செய்யாதீங்க, நான் உயிருடன் இருக்க காரணம் என் குடும்பம்” - அனுயா வேதனை!


மதுரை சம்பவம், சிவா மனசுல சக்தி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அனுயா பகவத். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பெண்கள் எதிர்கொள்ளும் பல சவால்களை குறித்தும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் வெளிப்படையாகப் பேசி இருந்தார்.
அந்த வகையில் சமீபத்தில் பெருகி வரும் மார்ஃபிங் வீடியோ பற்றி அனுயா பேசி இருந்தார். பெண்கள் ஏதாவது ஒரு வகையில் டார்கெட் செய்யப்படுகிறார்கள். மேலும் படிக்க


கடும் குளிரில் எமி ஜாக்சனிடம் கியூட் புரோபோஸ் செய்த ஹாலிவுட் நடிகர்..!


ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்-ஐ திருமணம் செய்து கொள்ள நடிகை எமி ஜாக்சன் நிச்சயம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன், 2010ம் ஆண்டு வெளிவந்த மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஏ.எல். விஜய் இயக்கிய இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக, பிரிட்டிஷ் வம்சாவளியை சேர்ந்தவராக எமி ஜாக்சன் நடித்திருந்தார். மேலும் படிக்க


ப்ளீஸ் இப்படி செய்யாதீங்க.. வாழ்க்கை காலியாகிடும்.. 'சிங்கப்பூர் சலூன்' இயக்குநர் கோரிக்கை


இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா, காஷ்மோரா உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கோகுல். தற்போது ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்' படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் படிக்க