மதுரை சம்பவம், சிவா மனசுல சக்தி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அனுயா பகவத். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பெண்கள் எதிர்கொள்ளும் பல சவால்களை குறித்தும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் வெளிப்படையாகப் பேசி இருந்தார்.


 



அந்த வகையில் சமீபத்தில் பெருகி வரும் மார்ஃபிங் வீடியோ பற்றி அனுயா பேசி இருந்தார். பெண்கள் ஏதாவது ஒரு வகையில் டார்கெட் செய்யப்படுகிறார்கள். அவர்கள் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் அவர்களை யாராவது ஒருவர் விமர்சனம் செய்து கொண்டே தான் இருப்பார்கள். ஒரு கட்டத்திற்குப் பிறகு சலித்துப் போகும் பெண்கள் “பேசினால் பேசி விட்டு போகட்டும். அதை பற்றி எனக்கு கவலையில்லை. நான் என்னுடைய வாழ்க்கையை வாழ போகிறேன்” என்ற மைண்ட் செட்டுக்கு வந்து விடுவார்கள்.


மார்ஃபிங் என்பது மிகுந்த மன உளைச்சலை கொடுக்கக் கூடியது. நானே அதைக் கடந்து வந்துள்ளேன் என்பதால் அது எப்படிப்பட்டது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். சின்ன சின்ன சிட்டிகளில் கூட மார்ஃபிங் என்பது மிகவும் சகஜமாக நடக்கிறது. இதன் காரணமாக பல பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நான் அப்படிப்பட்ட கடுமையான நேரத்தை கடந்து வந்துளேன் என்றால், அதற்கு முக்கியமான காரணம் என்னுடைய குடும்பத்தில் சப்போர்ட் சிஸ்டம் தான்.  


 



மார்ஃபிங் செய்வது என்றுமே பெண்களுக்கு பிரச்சினை தான். மக்கள் ஒரு ஃபன்னுக்காக அப்படி செய்கிறார்கள். அது ஒரு ஆன்லைன் பிசினஸ் அதிலும் மார்ஃபிங் செய்வது மிகவும் சுலபமானது. அதிலும் கொடுமையான விஷயம் என்னவென்றால், அது நான் இல்லை என்பதை நிரூபிக்க கூட முடியாது. நான் இன்று உயிருடன் இருப்பதற்கு என்னுடைய ஃபேமிலி தான் காரணம். ஆனால் இது போல பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் அவர்களின் குடும்பம் சப்போர்ட்டாக இருப்பார்களா என்பது சந்தேகம் தான். எனக்கு பர்சனலாகவே இதில் இருந்து எப்படி தப்பிப்பது, வெளியே வருவது எனத் தெரியவில்லை.


பெண்ணுக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிட்டால் உடனே, “நீ உன்னுடைய கணவன் வீட்டுக்கு போ” என பெற்றோர்களும், “பிறந்த வீட்டுக்கு போ” என கணவனும் கைகழுவி விட்டுவிடுவார்கள். பெரும்பாலான பெண்கள் இது போன்ற ஒரு பிரச்சனையை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பெண்களுக்கு எது அவர்களின் வீடு? அவர்கள் என்ன செய்வது? எனக்கு உண்மையிலேயே என்ன சொல்வது எனத் தெரியவில்லை. பெண்கள் துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும். அவர்களின் குடும்பம் தான் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். என்னால் முடிந்த எமோஷனல் சப்போர்ட் நிச்சயம் அவர்களுக்கு கொடுப்பேன்” எனப் பேசியுள்ளார்.