தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு எத்தனையோ செலிப்ரிட்டி ஜோடிகள் உருவாகி வந்து கொண்டிருந்தாலும், அவர்களில் ரசிகர்களின் மனதில் என்றென்றும் ஸ்பெஷல் இடம் பிடித்துள்ள ஜோடி என்றால் அது சூர்யா - ஜோதிகா (Suriya - Jyothika) தம்பதி.


நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகராக நடிகர் சூர்யா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறார் என்றாலும், சூர்யாவின் சினிமா கரியரின் ஆரம்பக் காலக்கட்டத்திலிருந்து அவருடன் ஒன்றாகப் பயணித்து, நட்பு, காதல் திருமணம், குழந்தைகள் என கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலமாக அவருடன் கைகோர்த்து சிறப்பான சப்போர்ட் சிஸ்டமாக வலம் வரும் நடிகை ஜோதிகாவுக்கு சம அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.


நடிகர் என்பதைத் தாண்டி மனைவி ஜோதிகாவைக் கொண்டாடும் கணவராக விளங்கும் சூர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பின் சிறு சிறு இடைவெளிகள் எடுத்து படம் நடித்து வந்த ஜோதிகா, தற்போது தமிழ் சினிமா தாண்டி, மலையாளம், இந்தி என பிற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தன் கணவர் சூர்யாவுடன் இணைந்து படங்களைத் தயாரித்தும் வருகிறார்.


குழந்தைகள் வளர்ந்தபின் படங்களில் மீண்டும் பிஸியாக வலம் வரும் ஜோதிகா, தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பயண வீடியோ லைக்ஸ்களை வாரிக் குவித்து வருகிறது.


உறைபனி பொழியும் ஆர்க்டிக் பகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜோதிகா, அங்குள்ள பின்லாந்து நாட்டில் கணவர் சூர்யாவுடன் பனியில் ஜாலியாக சுற்றுவது, ஹஸ்கி ஓநாய் வாகனத்தில் சவாரி செல்வது, ஐஸ் குளியல் போடுவது என இருவரும் மகிழ்ந்திருக்கும் வீடியோவினைப் பகிர்ந்துள்ளார்.


2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சூர்யா - ஜோதிகா இருவரும் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகும் அன்றுபோல் இன்றும் இளமை மாறாமல் காதலுடன் மகிழ்ந்திருப்பது அவர்களது ரசிகர்களை ‘கப்புள் கோல்ஸ்’ சொல்ல வைத்து லைக்ஸ் அள்ளி வருகிறது.


 






“2024 ஆண்டு முழுவதும் ட்ராவல்  தான்” என ஜோதிகா பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சூர்யா நடிக்க பிரமாண்டமாக தயாராகி வரும் கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக உள்ள நிலையில், ஜோதிகா, மாதவன், அஜய் தேவ்கன் இருவருடனும் இணைந்து நடித்துள்ள ஷைத்தான் திரைப்படம் வரும் மார்ச் 8ஆம் தேதி ரிலீசாகிறது.


மேலும் படிக்க: Sarpatta 2: நீயே ஒளி, நீதான் வழி.. சார்பட்டா 2ஆம் பாகத்துக்காக வெறித்தனமாக பயிற்சி எடுக்கும் ஆர்யா!


Anuya: “பெண்கள் ஃபோட்டோவை மார்ஃபிங் செய்யாதீங்க, நான் உயிருடன் இருக்க காரணம் என் குடும்பம்” - அனுயா வேதனை!