வாழ்க்கை ஒரு வட்டம்! விஜய் சேதுபதி வாழ்க்கையில் நடந்த மேஜிக் சம்பவங்கள்!


தன் வாழ்க்கையில் நம்ப முடியாத சுவாரஸ்யமான விஷயம் என நடிகர் விஜய் சேதுபதி நேர்காணல் ஒன்றில் சில விஷயங்களை குறிப்பிட்டு தெரிவித்துள்ளார். துணை நடிகராக தன் வாழ்க்கையை தொடங்கிய விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இன்றைய தேதிக்கு அவர் தான் ஓர் ஆண்டில் அதிகமான படங்களில் நடிப்பவர். மேலும் படிக்க


விஜய்யை இயக்குகிறாரா ஆர்.ஜே.பாலாஜி? - தளபதி 69 படம் பற்றி வெளியான அப்டேட்!


நடிகர் விஜய் நடிக்கும் 69வது படத்தை இயக்குவது யார் என்பது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி விட்டார். தற்போது தனது 68வது படத்தில் நடித்து வரும் விஜய், இன்னும் ஒரு படத்துடன் சினிமாவில் இருந்து விலக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார். மேலும் படிக்க


“சம்பவம் காத்திருக்கு..ரெடியா இருங்க” ; விடுதலை-2 பற்றி அப்டேட் கொடுத்த விஜய்சேதுபதி


விடுதலை படத்தின் 2ஆம் பாகத்தில் ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை இருக்கும் என நடிகர் விஜய் சேதுபதி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம்  31 ஆம் தேதி விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியானது. . எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில்  கதையின் நாயகனாக சூரி நடித்திருந்தார். மேலும் படிக்க


அப்படிப்போடு.. கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த தீபிகா படுகோனே.. குஷியில் ரசிகர்கள்!


பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான காதல் ஜோடியாக வலம் வரும் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதி விரைவில் தாங்கள் பெற்றோராக உள்ளதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை தீபிகா வெளியிட்டுள்ளார். செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்களின் திருமணம் 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனின் மகளான தீபிகா படுகோன், மாடலிங்கில் ஆர்வம் கொண்டிருந்தார். மேலும் படிக்க


வாழ்க்கையின் மிகச்சிறந்த விருது.. திருமாவளவன் செய்த செயலால் நெகிழ்ந்த மாரி செல்வராஜ்


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் தலைவர் தொல்.திருமாவளவனுடன் தன்னுடைய மறக்க முடியாத தருணத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்து பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இதனைத் தொடர்ந்து கர்ணன், மாமன்னன்  ஆகிய படங்களை இயக்கி முன்னணி மற்றும் முக்கிய இயக்குநராக உள்ளார். மேலும் படிக்க


மஞ்சுமெல் பாய்ஸை கொண்டாடும் தமிழ் ரசிகர்கள்.. கமல் தான் காரணம் என இயக்குநர் நெகிழ்ச்சி


மஞ்சுமெல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என தான் நினைக்கவில்லை என்று அப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  எங்கு திரும்பினாலும் மஞ்சுமெல் பாய்ஸ் படம் பற்றிய பேச்சுதான் சினிமா ரசிகர்களிடையே ஓடிக்கொண்டிருக்கிறது. திரையரங்குகளுக்கு இளைஞர் பட்டாளம் தொடர்ச்சியாக இந்த படம் பார்க்க படையெடுத்து வருகின்றனர். மலையாளத்தில் வெளியான இந்த சினிமா தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் படிக்க