நடிகர் விஜய் நடிக்கும் 69வது படத்தை இயக்குவது யார் என்பது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி விட்டார். தற்போது தனது 68வது படத்தில் நடித்து வரும் விஜய், இன்னும் ஒரு படத்துடன் சினிமாவில் இருந்து விலக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார். இதனால் அவரின் 69வது படத்தை இயக்கப்போவதாக யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ், வெற்றிமாறன், அட்லீ, ஏ.ஆர்.முருகதாஸ் என பல பேரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.
தனது கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பை இதுவரை இணையாத இயக்குநர்களுக்கு விஜய் தருவாரா? அல்லது ஏற்கனவே தன்னை வைத்து ஹிட் கொடுத்த இயக்குநர்களுக்கு வழங்குவாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பு கார்த்திக் சுப்புராஜூக்கே கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் எதிர்பாராத விதமாக இந்த லிஸ்டில் இயக்குநர், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பெயரும் சேர்ந்துள்ளது.
அவர் ஒன்லைனர் ஒன்றை சொல்லியுள்ளதாகவும், இதில் ஈர்க்கப்பட்ட விஜய் மேற்கொண்டு கதையை டெவலெப் செய்யுமாறும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, விஜய்யிடம் நான் ஏற்கனவே 40 நிமிடம் கதை சொன்னேன். அதை ரசித்து கேட்ட அவர் மார்ச் மாதத்தில் பண்ணிரலாமா என கேட்டார். அப்போது அவர் வாரிசு படத்தில் நடித்து வந்தார். மேலும் அடுத்து லியோ பண்ண வேண்டியது இருப்பதால் மார்ச்சில் வைத்துக் கொள்ளலாம் என கூறினார். நானும் சரி 14 மாதங்கள் எனக்கும் தேவை தான் என கூறினேன். உடனே எந்த மார்ச் என விஜய் கேட்டார். நான் 2024 மார்ச் என சொன்னேன். அதற்கு அவர் 2023 மார்ச் மாதத்தை சொன்னதாக கூறினார்.
ரொம்ப பெருசா இருக்கே என விஜய் கூற, நான் வீட்ல விஷேசம் படத்தை இயக்க 5 மாதங்கள் எடுத்துக் கொண்டேன். அது ஒரு ரீமேக் படம் என்றபோது விஜய் படம் என்பது அவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கிறது. அதனால் எனக்கு டைம் வேண்டும் என கேட்டேன்