- CM MK Stalin: தோல்வி பயம்; அதனால்தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு விசிட்! மோடிக்கு தகுதி இல்லை - ஸ்டாலின் சரவெடி
வெள்ள நிவாரணத்துக்கு கூட பணம் தராமல் இரக்கமற்ற ஆட்சியை நடத்தி வரும் பிரதமர் மோடிக்கு திமுகவை குறை கூற தகுதியில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு 2 நாட்கள் வந்திருந்தார். அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் திமுகவையும், தமிழ்நாடு அரசையும் விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் படிக்க
- CM MK Stalin: எந்தத் திட்டத்தை கொண்டு வந்தீங்க; எதை தடுத்தோம் - பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி
தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் போதுமான அளவு ஒத்துழைப்பு இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
- Exam Tips: நாளை தொடங்கும் பொதுத்தேர்வுகள்: மாணவர்கள் செய்ய வேண்டியதும், கூடாததும்- இதை மிஸ் பண்ணாதீங்க!
நண்பர்களுடன் அரட்டையை நிறுத்திவிடுவது, செல்போனில் நண்பர்களின் நம்பரை பிளாக் செய்து விடுவது, தனியறைக்குள் உட்கார்ந்து படிப்பது என்று ஒரு கடுமையான விரதக் காலமாக பல பேருக்கு இந்த தேர்வுக் காலம் அமைந்து விடுகிறது. சூழலை இத்தனை கடுமையாக நீங்கள் மாற்றிக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் தேர்வு என்பது போர்க்களம் இல்லை. அது பூக்கள் விளையாடும் நந்தவனம்! மேலும் படிக்க
- Vaigaichelvan: திமுக, காங். கூட்டணியில் கசப்பு; அதிமுகவிடம் மருந்து- அழைப்பு விடுத்த வைகைச்செல்வன்!
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் ஆலோசனை நடத்தினார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நல்லமுறையில் சுமூகமாக நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க
- TN Weather Update: மண்டையை பிளக்கும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. தவிக்கும் மக்கள்..
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் 3 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க