நாம் இனிப்பகங்களில் கடைகளில் பல்வேறு இனிப்புகளை வாங்கி சுவைத்தாலும், வீட்டில் வரும் பண்டிகைகளுக்கு நாம் அடிக்கடி செய்யக்கூடிய இனிப்பு என்னெவென்றால் அது கேசரி மற்றும் பாயாசம் தான். கேசரி என்றாலே பெரும்பாலானோர் ரவை வைத்து தான் செய்வர்.


தற்போது நாம் சேமியாவை வைத்து எப்படி சுவையான கேசரி செய்வது என்று தான் பார்க்க போகின்றோம். இது வழக்கமான ரவை கேசரியை விட மிகவும் சுவையாக இருக்கும். வாங்க இந்த கேசரியை எப்படி செய்வது என்று தான் பார்க்க போறோம்.


தேவையான பொருட்கள் 


சேமியா - கப்


நெய் - இரண்டு ஸ்பூன்


சர்க்கரை - 1 கப்


முந்திரி -15 


திராட்சை - 15


தண்ணீர் -2 கப் 


உணவு நிறமி


ஏலக்காய் பொடி சிறிதளவு


செய்முறை


முதலில் அடுப்பில் பேன் வைத்து அதில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து 15 முந்திரி பருப்பு மற்றும் 15 திராட்சையை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  (முந்திரி பொன்னிறமாகும், திராட்சை பலூன் போன்று உப்பி வரும் இது தான் சரியான பதம்)


அதே நெய்யில் ஒரு கப் சேமியாவை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். ஏற்கனவே வறுத்த சேமியாவாக இருந்தால் 1 நிமிடம் வறுத்தால் போதுமானது. ( சேமியா கருகி விடாமல் பார்த்துக் கொள்ளவும்) இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.


இப்போது அதே பேனில் ( pan) சேமியா அளந்த அதே கப் அளவில் இரண்டு கப் தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் நெய்யில் வறுத்த சேமியாவை தண்ணீரில் சேர்க்கவும். 


சேமியா நன்கு வெந்து 85 சதவீதம் அளவிற்கு தண்ணீர் வற்றியதும் ஒரு கப் சர்க்கரை அல்லது உங்கள் சுவைக்கு ஏற்ப அதிகமாக சேர்த்து கிளறி விடவும். இப்போது சர்க்கரை உருகியதும், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளவும்.


நிறத்திற்கு உங்களுக்கு வேண்டிய நிறத்திலான உணவு நிறமியை சேர்த்துக் கொள்ளலாம். இல்லையெனில் சிறிது குங்குமப்பூவை பாலி ஊறவைத்து சேர்த்தால் போதுமானது. இதை கரண்டியால் கலந்து விட்டு, சிறிது ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்த்து கிளறினால் சுவையான சேமியா கேசரி தயார். 


இதன் மீது நறுக்கிய பாதாம் தூவி பறிமாறலாம் சுவை சூப்பராக இருக்கும். 


மேலும் படிக்க 


Ulundhu Kali:பெண்களின் ஆரோக்கியத்திற்கும் எலும்புகளுக்கும் நன்மை பயக்கும் உளுந்து களி... செய்முறை இதோ!


வெண்டைக்காய்- வேர்க்கடலை துவையல்... சாதத்துடன் வைத்து சாப்பிட சூப்பர் காம்போ!