மேலும் அறிய

"சொந்தக் குடும்பத்தையே பார்க்காதவர் விஜய்” பதிலளிக்க முடியாமல் ஓட்டம் பிடித்த வேட்பாளர்! தவெக-வை திணறடித்த கோவைப் பெண்கள்

கோவையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரை கேள்விகளால் துளைத்தெடுத்த இளம்பெண்கள், பதிலளிக்க முடியாமல் ஓட்டம் பிடித்த வேட்பாளர்.

"சொந்தக் குடும்பத்தையே பார்க்காதவர், மக்களை எப்படிப் பார்ப்பார்?" என கோவையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரை கேள்விகளால் துளைத்தெடுத்த இளம்பெண்கள், பதிலளிக்க முடியாமல் ஓட்டம் பிடித்த வேட்பாளர்.

கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் என்.எம் சுகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். வாரச்சந்தை என்பதால் கூட்டம் அலைமோதிய நிலையில், வேட்பாளர் பொதுமக்கள் காய்கறி வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினார்.

அப்போது அங்கிருந்த ஒரு காய்கறி கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்மணி மற்றும் இரண்டு இளம்பெண்களிடம் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், தங்களது தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்கள் மற்றும் பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

அதை ஆமோதித்த காய்கறி கடையில் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்மணி மற்றும் இரண்டு இளம் பெண்கள் சராமரி கேள்விகளை எழுப்பத் தொடங்கினர்.

"உங்கள் தலைவர் விஜய் அவரது சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை, பேசுவதில்லை எனச் செய்திகள் வருகிறதே? தன் ரத்த உறவுகளையே பார்க்காத ஒருவர், எப்படி தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பார் என்று நீங்கள் நம்புகிறீர்கள்? இதற்கு உங்களிடம் என்ன பதில் இருக்கிறது?" என்றும், அதே போல் உங்கள் கட்சியில் இருக்கும் சிறு வயது உடையவர்கள் மற்ற கட்சிகளின் வயது மூத்த நிர்வாகிகளை அசிங்கமாக பேசுவதும், கேவலமாக பேசுவதும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இது போன்ற செயல்களை ஏன் உங்கள்  தலைவர் விஜய் கண்டிக்கவில்லை, அவ்வாறு பேசுபவர்கள் மீது உங்கள் தலைவர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்று கேள்வி எழுப்பினர்.

இந்த திடீர் அதிரடி கேள்விகளால் நிலைகுலைந்து போன, தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் என்.எம் சுகுமார் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிருவென விழித்தார். உடன் வந்த கட்சி நிர்வாகிகள் கேள்வி கேட்ட பெண்களை சமாதானம் செய்ய முயன்றும், "ஆதாரத்தோடு பதில் சொல்லுங்கள்" என அந்தப் பெண்கள் விடாப்பிடியாக நின்றனர்.

சுற்றுவட்டாரத்தில் இருந்த பொதுமக்களும் அங்கு கூடத் தொடங்கியதால், நிலைமை விபரீதமாவதை உணர்ந்த வேட்பாளர், மேற்கொண்டு பேசத் துணிவில்லாமல் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து மின்னல் வேகத்தில் புறப்பட்டுச் சென்றார். "வாக்கு" கேட்க வந்த இடத்தில் இளம் பெண்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் தவெக வேட்பாளர் தெறித்து ஓடியது" பேசும் பொருளாகியுள்ளது.

இதை சந்தைக்கு வந்திருந்த பொதுமக்கள் சிலர் வீடியோ எடுத்து தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தலைப்பு செய்திகள்

Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
Embed widget