மேலும் அறிய

TVK Vijay: விஜய் தலைமையில் அமைச்சரவை... தென்மாவட்டத்தில் இவருக்கு வாய்ப்பா? - எகிறும் எதிர்பார்ப்பு!

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைத்தால் முதலமைச்சர் விஜயின் அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தென்மாவட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ., பெயர் பலமாக அடிபடுகிறது.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைத்தால் முதலமைச்சர் விஜயின் அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தென்மாவட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ.வின் பெயர் பலமாக அடிபடுகிறது. அதனைப் பற்றிக் காணலாம். 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் யாருமே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் 1967ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை கிட்டதட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருந்த திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி ஆட்சியைப் பிடித்துள்ளது வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது. 

இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக ஆட்டோ ஓட்டுநர், விஜய் ஓட்டுநரின் மகன், கர்ப்பிணி பெண் உள்ளிட்ட பல சாமானிய மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் வெற்றிப் பெற்றிருக்கிறார். விஜய் தலைமையிலான அமைச்சரவையில் யார், யாருக்கு இடம் கிடைக்கும் என்ற உத்தேச பட்டியலும் வெளியாகியிருந்தது. 

இதில் விஜயுடன் பல காலமாக இருக்கும் சிலருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்ற வி.ஜி.சரவணன் பெயர் பலமாக அடிபடுகிறது. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அதிமுக சார்பில்  அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், காங்கிரஸ் சார்பில் ஊர்வசி அமிர்தராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் சண்முக சுந்தரம் ஆகியோர் போட்டியிட்டனர். இத்தொகுதியில் திமுக, காங்கிரஸ் கட்சியை விட அதிமுக அதிமுறை வெற்றி பெற்றுள்ளது. எஸ்.பி.சண்முகநாதன் 3 முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். அப்படிப்பட்ட அதிமுக கோட்டையை தவெக கைப்பற்றியிருக்கிறது. 

 எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுகவில் இணைந்த  எஸ்.பி.சண்முகநாதன் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கைத்தறித்துறை, இந்துசமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, பால்வளத்துறை ஆகிய துறைகளில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். மேலும் அனிதா ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, சீனா தானா செல்லபாண்டியன், நட்டர்ஜி எம்.பி,  என அரசியல் தலைவர்களை வளர்த்து விட்டவர் எஸ்.பி.சண்முகநாதன். அப்படிப்பட்ட அவர் தொகுதியில் போட்டியிட்ட முதல் தேர்தலில் தவெக வென்றுள்ளது. 

இங்கு வி.ஜி.சரவணன் வெற்றி பெற காரணம் அவரது அன்னை VGS மக்கள் நல அறக்கட்டளை தான் பலரும் சொல்கிறார்கள். ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குவதை பார்த்திருப்போம். ஆனால் வி.ஜி.சரவணன் வீடு தேடி போய் உணவு வழங்கி வருகிறார். இதனால் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. வி.ஜி.சரவணன் செய்யும் சமூக நலப்பணிகள் அப்பகுதி மக்களிடையே அவருக்கு செல்வாக்கை கொடுத்திருக்கிறது. 

மாற்றுத்திறனாளிகள், நடக்க முடியாத முதியவர்கள் உள்ள இல்லங்களை தேடிச் சென்று தினந்தோறும் உணவு வழங்கி வருவதை அவர் கடந்த 6 ஆண்டுகளாக செய்து வருகிறார். தினமும் மதியம் மற்றும் இரவு உணவு சுமார் 200 நபர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இறப்பு நேர்ந்தால் ஃப்ரீசர் பாக்ஸ், சவப்பெட்டி, உடலை எடுத்துச் செல்ல வாகனம் என அனைத்தையும் இலவசமாக வழங்கி வருகிறார்.  இதுவரை 40க்கும் மேற்பட்ட கைவிடப்பட்டவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்திருக்கிறார். 

மேலும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகள்,  ஆதரவற்ற பெண்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க  இலவச தையல் மிஷின்கள்,  10, 11,12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை என தனது சமூக பணிகளால் கவனம் ஈர்த்த அவருக்கு மக்கள் வெற்றியைப் பரிசாக அளித்திருக்கின்றனர். இவரது சேவைகளுக்காக பல்வேறு விருதுகளும் அளிக்கப்பட்டிருக்கிறது,  

இந்த நிலைஒயில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட வி.ஜி.சரவணன் கடந்த 2  வருடங்களாக சிறப்பான களப்பணிகளை செய்து வந்தார். அவரை பெருவாரியான வாக்கு சதவீதத்தில் வெற்றி பெற வைத்து எம்.எல்.ஏ.வாக்கிய ஸ்ரீவைகுண்டம் தொகுதி மக்கள் வி.ஜி.சரவணன் அமைச்சராக வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர். எப்போதும் தூத்துக்குடி அல்லது திருநெல்வேலியில் இருந்து ஒருவரை அமைச்சராக்கி இதுவரை திமுக, அதிமுக அழகு பார்த்த நிலையில் அந்த வரலாறு தமிழக வெற்றிக் கழகத்திலும் இருக்கும் என சொல்லப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Honda Amaze Price Features: மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
Embed widget