மேலும் அறிய

Puducherry Election Result: புதுச்சேரி சிம்மாசனத்தில் அமரப்போவது யார்? இன்று மதியம் தெரிந்துவிடும் ‘மெஜாரிட்டி’!

Puducherry assembly election result: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

புதுச்சேரி : நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் உள்ள 6 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் இந்த நடைமுறை நடைபெறவுள்ளது.

வரலாறு காணாத வாக்குப்பதிவு

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், புதுச்சேரி யூனியன் பிரதேச வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 91.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மின்னணு இயந்திரங்களில் பதிவான 89.87 சதவீத வாக்குகளுடன், 12,936 தபால் வாக்குகளும் இதில் அடங்கும். மொத்தமுள்ள 9.5 லட்சம் வாக்காளர்களில், சுமார் 25 ஆயிரம் முதல்முறை வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். 30 தொகுதிகளில் போட்டியிட்ட 294 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று மதியத்திற்குள் தீர்மானிக்கப்படும்.

3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்கள்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுச்சேரி: லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி, நேரு பாலிடெக்னிக்.

காரைக்கால்: கருணாநிதி பட்டமேற்படிப்பு மையம்.

மாஹே: நேரு அரசு மேல்நிலைப்பள்ளி.

ஏனாம்: அரசு கலைக்கல்லூரி.

இந்த மையங்களில் 2,600 புதுவை போலீசாரும், 500 துணை ராணுவத்தினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை நடைமுறை

மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கும் சேர்த்து 201 மேசைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 166 மேசைகளில் இயந்திர வாக்குகளும், 35 மேசைகளில் தபால் வாக்குகளும் எண்ணப்படுகின்றன. இதற்காக 859 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

காலை 8:00 மணி: தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்.

காலை 8:30 மணி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) திறக்கப்பட்டு எண்ணிக்கை தொடங்கும்.

முடிவுகள் எப்போது?

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி எண்ணிக்கை இரண்டு சுற்றுகளாக நடைபெறுகிறது:

முதல் சுற்று (மதியம் 1 மணி வரை): மண்ணாடிப்பட்டு, வில்லியனூர், கதிர்காமம், லாஸ்பேட்டை, நெல்லித்தோப்பு, ஏனாம் உள்ளிட்ட 17 தொகுதிகளின் முடிவுகள் முதலில் வெளியாகும். மதியம் ஒரு மணி அளவில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பதற்கான தெளிவான முன்னிலை நிலவரம் கிடைத்துவிடும்.

இரண்டாம் சுற்று (மாலை 6 மணி வரை):

உழவர்கரை, காமராஜர் நகர், முதலியார்பேட்டை, காரைக்கால் தெற்கு உள்ளிட்ட மீதமுள்ள 13 தொகுதிகளின் முடிவுகள் மாலை 6 மணிக்குள் முழுமையாக அறிவிக்கப்படும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வெற்றி கொண்டாட்டங்களின் போது அசம்பாவிதங்கள் தவிர்க்க புதுச்சேரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரம் மற்றும் கிராமப்புறங்களில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இன்று மாநிலம் முழுவதும் மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

மதியம் ஒரு மணி முதலே மாநிலத்தின் புதிய முதலமைச்சர் யார்? ஆட்சிக் கட்டிலில் அமரப்போகும் கூட்டணி எது? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகத் தொடங்கும் என்பதால் புதுச்சேரி அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளது.

தலைப்பு செய்திகள்

தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
TN Govt Entrepreneur: கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை
கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை - அரசு திட்டம்
Embed widget