மேலும் அறிய

SSC Exam Training: மத்திய அரசுப் பணிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவசப்  பயிற்சி: முழு விவரம் இதோ..

அரசு நடத்தும்‌ இப்பயிற்சி முகாமில்‌ போட்டித்‌ தேர்வுகளில்‌ ஆர்வமுள்ள இளைஞர்கள்‌ கலந்து‌ கொள்ளலாம்‌.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு, தமிழ்நாடு அரசு இலவசப் பயிற்சி வழங்க உள்ளது. அரசு நடத்தும்‌ இப்பயிற்சி முகாமில்‌ போட்டித்‌ தேர்வுகளில்‌ ஆர்வமுள்ள இளைஞர்கள்‌ கலந்து‌ கொள்ளலாம்‌. இந்நிகழ்ச்சி முழுவதுமாக இணையதளத்திலும்‌, அரசு கேபிள்‌ டிவியிலும்‌ நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்‌.

மத்திய அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ (Staff Selection Commission) ஆண்டுதோறும்‌ மத்திய அரசின்‌ துறைகளுக்கு தகுதிவாய்ந்த பணியாளர்களை பிரிவு பி மற்றும்‌ சி பணிகளுக்கு போட்டித்‌ தேர்வுகள்‌ நடத்தி பணியமர்த்துகிறது. இந்த ஆண்டு 20,000-க்கும்‌ மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு இவளியிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான பி பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல்‌ 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள்‌ Combined Graduate Level Examination (CGLE) போட்டித்‌ தேர்வு மூலம்‌ தேர்ந்தெடுக்கப்படுவார்கள்‌. இவற்றில்‌ உதவி பிரிவு அலுவலர்‌ (Assistant Section Officer) பணியிடங்கள் ‌மத்திய அரசின்‌ தலைமைச்‌ செயலகம்‌, மத்திய புலனாய்வுத்‌ துறை, ரயில்வே துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்‌ துறை, தலைமை அலுவலகம்‌ ஆகியவற்றிற்கும்‌, ஆய்வாளர்‌ பணியிடங்கள்‌, மத்திய  அரசின்‌ வருவாய்‌ துறைகளான Central Board of Direct Taxes, Central Board of In Direct Taxes & Customs, Directorate of Enforcement, Central Bureau of Narcotics ஆகியவற்றிலும்‌ மற்றும்‌ உதவியாளர்‌,
கண்காணிப்பாளர்‌ பணியிடங்கள்‌ மத்திய அரசின்‌ அனைத்துத்‌ துறைகளுக்கும்‌ தேர்ந்தெடுக்கப்படுவார்கள்‌.

மேலும்‌ சி பிரிவு பணிகள்‌ 12ஆம்‌ வகுப்பு முடித்த 18 முதல்‌ 27 வயதிற்குட்பட்ட இளைஞர்கள்‌ Combined Higher Secondary Level (CHSL) தேர்வு மூலம்‌ மத்திய அரசின்‌ அனைத்துத்‌ துறைகளுக்கும்‌ இளநிலை உதவியாளர்‌ மற்றும்‌ உதவியாளர்‌ பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்‌.

மேலும்‌, இப்பொதுப்பணிகள்‌ தவிர Junior Engineer தேர்வு, Stenographer தேர்வு, Sub Inspector in Delhi Police, Central Armed Police Force (CAPF) மற்றும் Central Industrial Security Force  தேர்வுகளும்‌ ஆண்டுதோறும்‌ நடைபெறுகிறது.

மேற்கண்ட தேர்வுகளுக்கு நிலை 1-ல்‌ பொதுவான போட்டித்‌ தேர்வுகளுக்குரிய பாடத்திட்டங்களான General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension பிரிவுகளில் இருந்துதான்‌ வினாக்கள்‌ கேட்கப்படுகிறது. நிலை 2-ல்‌ Mathematics Abilities, Reasoning and General Intelligence, English, General Awareness and Computer Knowledge பாடப் பிரிவுகளிலிருந்தும்‌ General studies பாடப் பிரிவுகளிலிருந்தும்‌ வினாக்கள்‌ கேட்கப்படுகிறது. 


SSC Exam Training: மத்திய அரசுப் பணிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவசப்  பயிற்சி: முழு விவரம் இதோ..

எனவே தமிழ்நாடு மாணவர்கள்‌ மத்திய அரசின்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ போட்டித்‌ தேர்வுகளில்‌ பெருமளவு பங்கேற்று வெற்றி பெற வேண்டும்‌ என்ற நோக்கில்‌, மனிதவள மேலாண்மைத்‌ துறை மற்றும்‌ தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ ஆகிய துறைகள்‌ இணைந்து, இத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும்‌ அனுபவம்‌ மிக்க வல்லுநர்களை கொண்டு, ஒரு நாள்‌ கருத்தரங்கம்‌ வரும்‌ ஞாயிற்றுக்கிழமை 09.10.2022 அன்று சென்னை, கோட்டூர்புத்தில்‌ அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம்‌ அரங்கில்‌ காலை 10.00 மணி முதல்‌ நடைபெறும்‌.

அரசு நடத்தும்‌ இப்பயிற்சி முகாமில்‌ போட்டித்‌ தேர்வுகளில்‌ ஆர்வமுள்ள இளைஞர்கள்‌ கலந்து‌ கொள்ளலாம்‌. நேரில்‌ வர இயலாத மாணவர்கள்‌ பயனடையும்‌ வகையில்‌ இந்நிகழ்ச்சி முழுவதுமாக இணையதளத்திலும்‌, அரசு கேபிள்‌ டிவியிலும்‌ நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்‌ மற்றும்‌ சமூக ஊடகங்களிலும்‌ பதிவேற்றப்பட உள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

School Holiday: நாளை பள்ளிக்கு போக வேண்டாம்! திங்கட்கிழமையே விடுமுறை அறிவித்த கல்வித்துறை
School Holiday: நாளை பள்ளிக்கு போக வேண்டாம்! திங்கட்கிழமையே விடுமுறை அறிவித்த கல்வித்துறை
புதுச்சேரி ஆசிரியர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்! ‘மாணவர்களுக்கு முன்மாதிரியாக செயல்படுங்கள்’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி
புதுச்சேரி ஆசிரியர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்! ‘மாணவர்களுக்கு முன்மாதிரியாக செயல்படுங்கள்’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி
PM YASASVI கல்வி உதவித்தொகை: ரூ.1.25 லட்சம் வரை பெற விண்ணப்பிக்கலாம் - மாணவர்களுக்கு அழைப்பு!
PM YASASVI கல்வி உதவித்தொகை: ரூ.1.25 லட்சம் வரை பெற விண்ணப்பிக்கலாம் - மாணவர்களுக்கு அழைப்பு!
பள்ளி மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க! ₹1.25 லட்சம் வரை உதவித்தொகை பெற உடனே அப்ளை பண்ணுங்க!
பள்ளி மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க! ₹1.25 லட்சம் வரை உதவித்தொகை பெற உடனே அப்ளை பண்ணுங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vanni Arasu:
Vanni Arasu: "முதலமைச்சர் விஜய் கொடுத்த துணிச்சல்லதான் நாங்க செயல்படுகிறோம்.." நெகிழ்ந்து பேசிய அமைச்சர் வன்னியரசு
Vijay PM Candidate : ’பிரதமர் வேட்பாளர் விஜய்? - பதற்றத்தில் காங்கிரஸ்’ டார்கெட் 2034..!
’பிரதமர் வேட்பாளர் விஜய்? - பதற்றத்தில் காங்கிரஸ்’ டார்கெட் 2034..!
CM Vijay: மீண்டும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?
மீண்டும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?
"இனி பொறுக்க முடியாது!" தனிப் பெரும்பான்மைக்கு போட்ட திட்டம்... சீக்ரெட் மூவ் நகர்த்தும் விஜய்!
TASMAC employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! விடுமுறை, பணி உயர்வு, முன் பணம் வெளியான அசத்தல் அறிவிப்புகள் இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! விடுமுறை, பணி உயர்வு, முன் பணம் வெளியான அசத்தல் அறிவிப்புகள் இதோ..
Lexus ES 350h Hybrid Sedan: போடு சக்க.! 25 கிமீ-க்கு மேல் மைலேஜ்; புதிய ES 350h ஹைப்ரிட் செடானை இறக்கிய லெக்ஸஸ்; புதிய அம்சங்கள்
போடு சக்க.! 25 கிமீ-க்கு மேல் மைலேஜ்; புதிய ES 350h ஹைப்ரிட் செடானை இறக்கிய லெக்ஸஸ்; புதிய அம்சங்கள்
Trump Slams Iran: ஈரான் ஒரு தோல்வியடைந்த நாடு, அது செத்துவிட்டது“; பதில் தாக்குதலால் கோபத்தில் கொந்தளித்த ட்ரம்ப்
ஈரான் ஒரு தோல்வியடைந்த நாடு, அது செத்துவிட்டது“; பதில் தாக்குதலால் கோபத்தில் கொந்தளித்த ட்ரம்ப்
7 Seater Turbo CNG: பட்டாசான தீபாவளி தான்..! 7 சீட்டரில் டர்போ சிஎன்ஜி - மைலேஜும், ஸ்பீடும் அள்ளப்போகுது - முழு விவரம்
பட்டாசான தீபாவளி தான்..! 7 சீட்டரில் டர்போ சிஎன்ஜி - மைலேஜும், ஸ்பீடும் அள்ளப்போகுது - முழு விவரம்
Embed widget