மேலும் அறிய

CBSE results: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?- மாணவர்கள் தவிப்பு

நாடு முழுவதும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

நாடு முழுவதும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளை முறையே ஜூலை 4 மற்றும் 10ஆம் தேதிகளில் வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

கரோனா பெருந்தொற்றுச் சூழல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த 2020ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டன. அதுபோன்ற எதிர்பாராத சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, இரு பருவப் பொதுத் தேர்வு முறையை சிபிஎஸ்இ கடந்த ஆண்டு அறிவித்தது.

2 பருவத் தேர்வுகள்

புதிய நடைமுறையின்படி, பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வு 90 நிமிடங்களுக்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஏதேனும் ஒரு தேர்வை நடத்த முடியாத சூழலில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

புதிய தேர்வு முறையை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், மாதிரி கேள்வித் தாள்களும், மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டமும் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ஏற்கெனவே திட்டமிட்டவாறு 2021-22 கல்வி ஆண்டுக்கான சிபிஎஸ்இ முதல் பருவப் பொதுத்தேர்வு நடைபெற்றது. 

ஏப்ரல் - மே மாதத்தில் பொதுத் தேர்வுகள்

அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி, மே 17ஆம் தேதி வரை நடைபெற்றது. 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி, மே 18ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, உயர் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் மத்தியக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்துள்ளது.

CBSE results: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?- மாணவர்கள் தவிப்பு

இதற்கிடையே 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளை முறையே ஜூலை 4 மற்றும் 10ஆம் தேதிகளில் வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. எனினும் இந்தத் தகவலை சிபிஎஸ்இ உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 4) வெளியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது. பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால், உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கைக்குத் தாமதமாவதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

ஜூலையில் முக்கியத் தேர்வுகள்

உயர் கல்வி மாணவர் சேர்க்கை தீவிரமாகத் தொடங்கியுள்ள நிலையில், மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் உள்ளிட்ட முக்கியப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஒரே மாதத்தில், ஜூலையில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுகள் அனைத்தையும் என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இதனால் மத்தியக் கல்வி வாரியம் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
ஜிப்மர் முதுநிலை செவிலியர் நுழைவுத் தேர்வு: 124 இடங்களுக்கு கடும் போட்டி, முடிவுகள் ஆகஸ்டு 10!
ஜிப்மர் முதுநிலை செவிலியர் நுழைவுத் தேர்வு: 124 இடங்களுக்கு கடும் போட்டி, முடிவுகள் ஆகஸ்டு 10!
ஆன்லைனில் ஒரு கிக்... ஹாஸ்டலில் ஒரு சீட்! மயிலாடுதுறை அரசு சமூகநீதி விடுதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைனில் ஒரு கிக்... ஹாஸ்டலில் ஒரு சீட்! மயிலாடுதுறை அரசு சமூகநீதி விடுதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Embed widget