மேலும் அறிய

Public Exam Time Table: 10, 11, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் எப்போது?- இன்று வெளியாகிறது அட்டவணை

Public Exam Time Table 2024: தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் மாணவர்களுக்கான10, 11, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியாக உள்ளது

தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் மாணவர்களுக்கான10, 11, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்னும் பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியாக உள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்த அட்டவணையை வெளியிட உள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு,  மாணவர்களின் கடந்த கால செயல்திறன், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதற்கிடையே 2021-2022ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் மே மாதம் தொடங்கி, அதே மாதத்தில் முடிவடைந்தன.  2022- 23 ஆம் கல்வி ஆண்டு எந்த தாமதமும் இல்லாமல் ஜூன் மாதம் தொடங்கியது. 

இவர்களுக்கான தேர்வுகள் வழக்கம்போல் மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்றன. குறிப்பாக மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 வரை 12ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற்றது. 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதினர். 11ஆம் வகுப்புத் தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுதினர். மார்ச் 14ஆம் தேதி இவர்களுக்குத் தேர்வு தொடங்கி, ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது.  10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தொடங்கி, 20ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். 

அட்டவணை வெளியீடு?

இந்த நிலையில், 2023- 24ஆம் ஆண்டு10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன என்ற அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. இதை பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (நவம்பர் 16) சென்னையில் அறிவிக்க உள்ளார்.

முன்னதாக குழந்தைகள் தின விழா கடந்த நவம்பர் 14ம் தேதி சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’தீபாவளி பண்டிகைக்குப் பிறகு,  பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று கூறி இருந்தோம். இன்னும் ஓரிரு நாட்களில் அட்டவணை வெளியிடப்ப்படும்’’ என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
கியூட், பொதுத்தேர்வுகள்.. லட்சக்கணக்கான மாணவர் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனை- பெரும் ஆபத்து!
கியூட், பொதுத்தேர்வுகள்.. லட்சக்கணக்கான மாணவர் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனை- பெரும் ஆபத்து!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
Embed widget