மேலும் அறிய

Vijayadasami: விஜயதசமி மாணவர் சேர்க்கை மும்முரம்; அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு

விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில்,  அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. 

விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில்,  அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஒவ்வோர் ஆண்டும் நவராத்திரி பண்டிகையின் கடைசி நாளான விஜயதசமி நாள் அன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் இந்த தினத்தில் தங்கள் குழந்தைகளைக் கை விரல் பிடித்து, நெல்லைத் தட்டில் பரப்பி, முதல் எழுத்தாக ’அ’ என்று எழுதப் பழக்குவர். விஜய தசமியை முன்னிட்டு கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. 

2018 முதல்

வழக்கமாக தனியார் பள்ளிகள் இந்த தினத்தை மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதைக் கண்ட தமிழ்நாடு பள்ளிக்  கல்வித்துறை, 2018 முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விஜய தசமி தினத்தில் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றது. அப்போது முதல் 5 
ஆண்டுகளாக விஜய தசமியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 

இந்த முறை 6ஆவது ஆண்டாக நாளை தமிழ்நாடு முழுவதும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளன. எல்கேஜி, யூகேஜி ஆகிய மழலையர் வகுப்புகளுக்கும் 1ஆம் வகுப்புக்கும் உரிய வயதை அடைந்த மாணவர்கள் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர். விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிகள்  தீவிரம் காட்டி வருகின்றன. 

இதற்காக அரசுப் பள்ளிகளில் அளிக்கப்படும் வசதிகள், சலுகைகள், உணவுத் திட்டம், உட்கட்டமைப்பு வசதி ஆகியவை குறித்து, பள்ளிகள் விளம்பரம் செய்து வருகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து விளம்பரம் 
செய்யப்பட்டு வருகின்றது. 

இதையும் வாசிக்கலாம்:  APAAR: ”Pre KG முதல் PhD வரை” - ஆதார் போல் வரும் அபார்: மாணவர்களுக்கும் ’ஒரே’ திட்டத்தை கொண்டுவரும் மத்திய அரசு!

அசத்தும் அரசுப்பள்ளிகள் 

100 சதவீதம் இலவசமாக, தரமான கல்வி வழங்கப்படுவதுடன், தகுதி மற்றும் திறமையான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்பித்து வருகின்றன. எண்ணும் எழுத்தும் வகுப்பறை வசதியுடன் புத்தகம், குறிப்பேடு, சீருடை, காலணிகள், புத்தகப் பை, கிரேயான்கள், வண்ணப் பென்சில்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்துடன் காலை  உணவுத் திட்டமும் இலவச மதிய உணவும் பள்ளிகளிலேயே வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி அரசு விடுமுறை தினமாக  இருந்தாலும் நாளை ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்காக ஆசிரியரின் வருகை முக்கியம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Incentives for students : மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை.! இன்று முதல் விண்ணப்பிக்க அரசு அழைப்பு- யார் யாருக்கெல்லாம்.?
மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை.! இன்று முதல் விண்ணப்பிக்க அரசு அழைப்பு- யார் யாருக்கெல்லாம்.?
CBSE: சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தத்தில் என்னதான் குளறுபடி? மென்பொருள் நிறுவனம் விளக்கம்
CBSE: சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தத்தில் என்னதான் குளறுபடி? மென்பொருள் நிறுவனம் விளக்கம்
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
CA Final Result: ஐயோ இதிலுமா… சிஏ இறுதித் தேர்வு தரவுகள் இணையத்தில் கசிவு? மாணவர்கள் அதிர்ச்சி!
CA Final Result: ஐயோ இதிலுமா… சிஏ இறுதித் தேர்வு தரவுகள் இணையத்தில் கசிவு? மாணவர்கள் அதிர்ச்சி!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly LIVE Today: சட்டமன்றத்தில் ரவுண்டு கட்ட தயாராகும் உதயநிதி, எடப்பாடி.? சமாளிப்பாரா சிஎம் விஜய் - நேரலை இதோ..
சட்டமன்றத்தில் ரவுண்டு கட்ட தயாராகும் உதயநிதி, எடப்பாடி.? சமாளிப்பாரா சிஎம் விஜய் - நேரலை இதோ..
EPS vs SPV: பிடிவாதத்தில் இபிஎஸ்.! முகத்தை கூட பார்க்காத எஸ்.பி.வேலுமணி டீம்- சட்டசபையில் நடந்தது என்ன.?
பிடிவாதத்தில் இபிஎஸ்.! முகத்தை கூட பார்க்காத எஸ்.பி.வேலுமணி டீம்- சட்டசபையில் நடந்தது என்ன.?
TN Govt: தமிழ்நாடு அரசின் முடிவு தவறு, கோர்ட்டில் நிற்காது..! அலட்சியமா? தனியார் நிறுவனம் ஆவேசம்
தமிழ்நாடு அரசின் முடிவு தவறு, கோர்ட்டில் நிற்காது..! அலட்சியமா? தனியார் நிறுவனம் ஆவேசம்
TN Weather Update: இன்றும் சென்னையில் மழை வெளுக்குமா? 27 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
இன்றும் சென்னையில் மழை வெளுக்குமா? 27 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
EPS vs Vijay: 9-5 Desk Job பார்க்கும் முதல்வர் விஜய்.! இந்த நேரத்திலாவது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பாரா.? விளாசும் இபிஎஸ்
9-5 Desk Job பார்க்கும் முதல்வர் விஜய்.! இந்த நேரத்திலாவது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பாரா.? விளாசும் இபிஎஸ்
Tata 7 Seater EV: டாடாவின் முதல் 7 சீட்டர் மின்சார SUV - மஹிந்த்ராவின் XEV 9S-ஐ சமாளிக்குமா? ரேஞ்ச், விலை விவரங்கள்
டாடாவின் முதல் 7 சீட்டர் மின்சார SUV - மஹிந்த்ராவின் XEV 9S-ஐ சமாளிக்குமா? ரேஞ்ச், விலை விவரங்கள்
EPF Intrest: EPF வட்டி விகிதத்தை அறிவித்த மத்திய அரசு - கூடியதா? குறைந்ததா? எப்போது வரவு வைக்கப்படும்?
EPF வட்டி விகிதத்தை அறிவித்த மத்திய அரசு - கூடியதா? குறைந்ததா? எப்போது வரவு வைக்கப்படும்?
C Mahendran CPI: தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
Embed widget