மேலும் அறிய

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!

செப்டம்பர் 6 ஆம் தேதி  யுபிஎஸ்சி முதல்நிலை கல்வி உதவித்தொகைக்கான தேர்வானது நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் 200 மதிப்பெண்களுக்கு 197.33 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

யு.பி.எஸ்.சி முதல்நிலை கல்வி உதவித்தொகைத் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டி டிஜிபி அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. 

யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை தேர்வு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வு வழியாக தகுதியாக மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.7,500 வீதம்  10 மாதங்களுக்கு  இந்த பணம் வழங்கப்படுகிறது. அதேசமயம் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் முதன்மை தேர்வுக்கு தயாராகும் வகையில் ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். 

முதல் மதிப்பெண்ணால் வெடித்த சர்ச்சை

இப்படியான நிலையில் செப்டம்பர் 6 ஆம் தேதி  யுபிஎஸ்சி முதல்நிலை கல்வி உதவித்தொகைக்கான தேர்வானது நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் 200 மதிப்பெண்களுக்கு 197.33 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. 

அதாவது கடந்த ஆண்டுகளில் முதல் மதிப்பெண் என்பது, 2023ல் 172 மதிப்பெண், 2024ல் 167.3 மதிப்பெண், 2025ல் 139.94 மதிப்பெண் என்று தான் இருந்தது. ஆனால் இம்முறை 197.33 வந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு முதல் இரண்டு இடங்களைப் பிடித்த தேர்வர்களின் முடிவுகளுக்கு இடையேயான வித்தியாசம் 52.71 மதிப்பெண் உள்ளது. இரண்டாவது இடம் பிடித்த மதிப்பெண் 144.62 ஆக உள்ளது. இந்த மதிப்பெண் வித்தியாசம் குறித்து பல கேள்விகளை தேர்வு எழுதியவர்கள் எழுப்பியுள்ளனர். இந்த தேர்வில் பங்கேற்ற சில மாணவர்கள் டிஜிபி அலுவலகத்தில் இதுதொடர்பாக புகாரளித்தனர்.

வினாத்தாளுடன் கழிவறை சென்ற தேர்வர்

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர் தேர்வு நடந்த நாளில் தேர்வறையை விட்டு சுமார் 20 நிமிடங்கள் எழுந்து கழிவறைக்கு வினாத்தாளை எடுத்துக் கொண்டு சென்றதாக புகார் தெரிவித்தவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தை அந்த மையத்தில் தேர்வெழுதிய ஒரு மாணவர் பதிவிட்டதை தொடர்ந்தே தங்களுக்கு தெரிந்ததாக புகார் கூறிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கோயம்புத்தூர் தேர்வு மையத்திலும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்ததாகவும் சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறுவதற்கு முன்னால் இந்த விஷயம் தொடர்பாக தவறு இருக்கும் பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் மற்ற மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
புதுச்சேரி பள்ளி மாணவர்களே ரெடியா... ! அடுத்து 5 நாள் தொடர் விடுமுறை !
புதுச்சேரி பள்ளி மாணவர்களே ரெடியா... ! அடுத்து 5 நாள் தொடர் விடுமுறை !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
TN Govt Entrepreneur: கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை
கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை - அரசு திட்டம்
Embed widget