மேலும் அறிய

பாலியல் வன்கொடுமை விவகாரம்: மாணவிகளுக்கு கட்டுப்பாடு விதித்த மைசூர் பல்கலைக்கு கடும் எதிர்ப்பு!

மைசூர் பல்கலை மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து பல்கலைக்கழகத்தில் மாலை 6:30 மணிக்கு மேல் மாணவிகள் நடமாட தடை விதித்ததால், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் பல்கலைக்கழகத்தில் மாலை 6:30 மணிக்கு மேல் மாணவிகள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது.

கடந்த 24-ம் தேதி மைசூர் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து வந்த மாணவி சாமுண்டி மலை அருகே 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மாணவியின் நண்பர் கடுமையாக தாக்கப்பட்டார். மக்கள் அதிகம் வந்து செல்லும் வழிபாட்டுத்தலமாகவும் சுற்றுலா தலமாகவும் விளங்கும் சாமுண்டி மலைப்பகுதியில் மாலை நேரத்தில் நடந்த இச்சம்பவம் கர்நாடகா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர் இயக்கங்கள், மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தான், மாணவிகள் பாதுகாப்பு எனக்கூறி பல்கலைக்கழக பதிவாளர் நேரக்கட்டுப்பாட்டை விதித்து உள்ளார். பல்கலைக்கழக வளாகத்துக்கு உட்பட்ட குக்கராஹல்லி ஏரி அருகே மாலை 6:30 மணிக்கு மேல் மாணவிகளுக்கு அனுமதி இல்லை என அவர் தெரிவித்து உள்ளார். மாணவிகள் நடமாட்டத்தை தடுக்க பாதுகாப்பு அதிகாரிகள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடுமாறு அவர் உத்தவிட்டு உள்ளார்.பாலியல் வன்கொடுமை விவகாரம்: மாணவிகளுக்கு கட்டுப்பாடு விதித்த மைசூர் பல்கலைக்கு கடும் எதிர்ப்பு!

அதுபோல், மானசா கங்கோத்ரி வளாகத்தில் மாலை 6:30 மணிக்கு மேல் மாணவிகள் தனியாக அமர்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்திலும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பாதுகாப்பு அதிகாரி ஒருவரை பணி அமர்த்த வேண்டும் என பல்கலைக்கழக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், இந்த கட்டுப்பாடு மாணவர்களுக்கு விதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர், “பல்கலைக்கழக வளாகத்தில் ஆள்நடமாட்டம் அற்ற பகுதிகளுக்கு செல்லும் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து காவல்துறை கவலை தெரிவித்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் யாவும் மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே அறிவிக்கப்பட்டு உள்ளது.” என்றார்.

குக்கராஹல்லி ஏரிப்பகுதி என்பது ஏராளமான மரங்கள், செடிகள் நிறைந்த அடர்த்தியான வனப்பகுதி போன்று காட்சி தரும் என்பதால் அங்கு மாணவிகள் பாதுகாப்பு கருதி அவர்கள் செல்வதற்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

மாணவிகள் எங்கு சென்றாலும் தனியாக செல்லாமல் நண்பர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதையே தாங்கள் தெரிவிக்க விரும்பியதாகவும், பதிவாளர் பயன்படுத்திய சில வார்த்தைகள் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.

தலைப்பு செய்திகள்

TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
Embed widget