மேலும் அறிய

TNPSC Group 2 Result: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் : பார்ப்பது எப்படி?

ஜனவரி 12ஆம் தேதி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்த நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.

நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று (ஜன.11) வெளியாகி உள்ளன. குறிப்பாக, நேர்காணல் கொண்ட, அல்லாத பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதைப் பார்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.

அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அக்டோபர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகின.  

முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்த நிலையில், 55,071 தேர்வர்கள் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்றது. இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. 

ஜனவரியில் தேர்வு முடிவுகள்

முதன்மைத் தேர்வு முடிவுகளும் தாமதமான நிலையில், 8 மாதங்கள் கழித்து டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். எனினும் குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.

தேசிய அளவில் ட்ரெண்ட்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டினர். தாமதம் குறித்து, தேர்வர்கள் சமூக வலைதளங்களிலும் தேசிய அளவில் ட்ரெண்டாக்கினர். 

ஆண்டுக்கணக்கில் தாமதம் ஏற்பட்டு வருவதால், குரூப் 2, 2ஏ பணிகளுக்கான காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், ஜனவரி 11ஆம் தேதி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இதைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் இன்று (ஜன.11) வெளியாகி உள்ளன.

இதை அறிந்துகொள்வது எப்படி?

* தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

* அதில் https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx?c=4593 பக்கத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

* அல்லது https://www.tnpsc.gov.in/document/Certificateverification/2022_03_GR_II_MAINS_OT_PUB_LIST_2K24.pdf

என்ற இணைப்பைப் பதிவிட்டு, நேர்காணல் கொண்ட பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

நேர்காணல் கொண்ட 161 பதவிகளுக்கு மட்டும் 1:3 என்ற அளவில், 483 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். 

நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான கணினி வழி சான்றிதழ்‌ சரிபார்ப்புக்கான முடிவுகள்‌ தேர்வாணைய வலைதளத்தில்‌ இருவழித்‌ தொடர்பு முறையில் (Interactive Mode) வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்‌, நேர்முகத்‌ தேர்வு பதவிகளுக்கான தெரிவு முடிவடைந்த பின்னர்‌ தேர்வர்கள்‌ முதன்மைத் தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌, தரவரிசை உள்ளிட்ட விவரங்கள்‌ தேர்வாணைய வலைதளத்தில்‌ இருவழித்‌ தொடர்பு முறையில்‌ நேர்முக சான்றிதழ்‌ சரிபார்ப்பு மற்றும்‌ கலந்தாய்வுக்கு முன்னர்‌ வெளியிடப்பட உள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/ 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

RTE Admission: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை; எப்போது ஆர்டிஇ குலுக்கல்; கலந்துகொள்வது எப்படி?
RTE Admission: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை; எப்போது ஆர்டிஇ குலுக்கல்; கலந்துகொள்வது எப்படி?
கடந்த ஆண்டை மிஞ்சிய கோவை தேர்ச்சி விகிதம் – மாணவிகள் அசத்தல்
கடந்த ஆண்டை மிஞ்சிய கோவை தேர்ச்சி விகிதம் – மாணவிகள் அசத்தல்
Hindi imposition: இந்தித் திணிப்பை கைவிடுக; இருமொழிக் கொள்கை, தமிழ் மொழி பாதுகாப்பு- ராமதாஸ்
Hindi imposition: இந்தித் திணிப்பை கைவிடுக; இருமொழிக் கொள்கை, தமிழ் மொழி பாதுகாப்பு- ராமதாஸ்
TNPSC Notification: வெளியான அறிவிப்பு; 45 பதவிகள்; 460+ காலியிடங்கள்- டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Notification: வெளியான அறிவிப்பு; 45 பதவிகள்; 460+ காலியிடங்கள்- டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

அண்ணாமலை RETURNS.. நயினாருக்கு டாட்டா ? பாஜக மாஸ்டார் ப்ளான்
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் புதுக்கோட்டை முதலிடம்! வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்
Odisha young couple | நடுரோட்டில் சரமாரி தாக்குதல்! LOVER-க்காக உதைவாங்கிய பெண்! பதறவைக்கும் வீடியோ
CM Vijay Cabinet | அமைச்சர் பதவி யாருக்கு? காய் நகர்த்தும் விசிக, காங்! TVK மா.செ.க்கள் போர்கொடி! குழப்பத்தில் CM விஜய்
Vijay Reels | அதிகாரியா? FAN BOY-ஆ?முதல்வர் மீட்டிங் LEAKED! REELS எடுத்த நபர் யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Slams Modi: “'இங்க புயலே வீசிட்டு இருக்கு, அங்க மெலோனிக்கு சாக்லெட் கொடுத்துட்டு இருக்கார் மோடி“; சீறிய ராகுல்
“'இங்க புயலே வீசிட்டு இருக்கு, அங்க மெலோனிக்கு சாக்லெட் கொடுத்துட்டு இருக்கார் மோடி“; சீறிய ராகுல்
Modi Meloni Melody: இத்தாலி பிரதமர் மெலோனிக்கு ‘மெலோடி‘ சாக்லெட் கொடுத்த மோடி; இணையத்தில் வைரலாகும் வீடியோ
இத்தாலி பிரதமர் மெலோனிக்கு ‘மெலோடி‘ சாக்லெட் கொடுத்த மோடி; இணையத்தில் வைரலாகும் வீடியோ
US Iran War: “மறுபடியும் தாக்குனா அமெரிக்காவுக்கு பல சர்ப்ரைஸ் காத்திருக்கு“ அப்பாஸ் அரக்சி பகிரங்க எச்சரிக்கை
“மறுபடியும் தாக்குனா அமெரிக்காவுக்கு பல சர்ப்ரைஸ் காத்திருக்கு“ அப்பாஸ் அரக்சி பகிரங்க எச்சரிக்கை
RTE Admission: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை; எப்போது ஆர்டிஇ குலுக்கல்; கலந்துகொள்வது எப்படி?
RTE Admission: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை; எப்போது ஆர்டிஇ குலுக்கல்; கலந்துகொள்வது எப்படி?
Savukku Shankar: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த முதலமைச்சர் விஜய்.! காரணம் என்ன.?
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த முதலமைச்சர் விஜய்.! காரணம் என்ன.?
அமைச்சர் பதவி நோ... கை விரித்த விஜய்.! நட்டாற்றில் தவிக்கும் சி.வி.சண்முகம் டீம்- அடுத்தது என்ன.?
அமைச்சர் பதவி நோ... கை விரித்த விஜய்.! நட்டாற்றில் சி.வி.சண்முகம் டீம்- அடுத்தது என்ன.?
New Ration Card : ரேஷன் கார்டு வீடு தேடி வரப்போகுது.! காத்திருந்த பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு
ரேஷன் கார்டு வீடு தேடி வரப்போகுது.! காத்திருந்த பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு
அதிரடிப்படை எங்கே? - முதல்வர் விஜய் அறிவித்த திட்டத்தைக் கிழித்துத் தொங்கவிட்ட டிடிவி தினகரன்
முதல்வர் விஜய்யின் 'சிங்கப் பெண்' திட்டம் தோல்வியா? - டிடிவி தினகரன் அதிரடி அட்டாக்
Embed widget