மேலும் அறிய

TNPSC Group 2, 2A: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதன்மைத் தேர்வில் முக்கிய மாற்றம்!

TNPSC Group 2, 2A results 2025: குரூப் 2 , 2 A பணிகளுக்கான முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வுகளுக்கான முடிவுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இன்று (டிசம்பர் 22) வெளியிடப்பட்டு உள்ளன. இதைக் காண்பது எப்படி? கீழே காணலாம்.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி கூறி உள்ளதாவது:

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II & IIA பணிகள்) (அறிவிக்கை எண்.11/2025) முதன்மைத் தேர்வுக்கான பட்டியல்கள் வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II & IIA பணிகள்) உள்ளடக்கிய பதவிகளின் நேரடி நியமனத்திற்காக 15.07.2025 அன்று அறிவிக்கை வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு 28.09.2025 அன்று முற்பகலில் நடைபெற்றது. இந்தத் தேர்விற்கு 5,53,634 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேற்படி தேர்வினை 4,20,217 தேர்வர்கள் எழுதினர்.

இத்தெரிவிற்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் 2025-இல் வெளியிடப்படும் என தேர்வாணைய வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறே, மேற்கண்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி, குரூப் 2 மற்றும் குரூப் 2 A பணிகளுக்கான முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல்கள் தேர்வாணைய (www.tnpsc.gov.in) இன்று (22.12.2025 அன்று) வெளியிடப்பட்டுள்ளன.

எழுத்துத் தேர்வு மூலம் முதன்மைத் தேர்வு

குரூப் 2 A பணிகளில் உள்ளடக்கிய பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு (கொள்குறி வகை), தாள்-II (பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு) கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் என அறிவிக்கையில் (Notification) தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாகக் காரணங்களுக்காக குரூப் 2 A பணிகளின் தாள்-II -ற்கான முதன்மைத் தேர்வு OMR முறையில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைத் தேர்வு பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வர்கள், தேர்வாணைய வலைதளத்தினை (www.tnpsc.gov.in) தொடர்ந்து பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுவதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் தெரிவித்துள்ளார். 

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

https://tnpsc.gov.in/document/certificateverification/11_2025_GROUP_II_PUBLIST.pdf என்ற இணைப்பை தேர்வர்கள் க்ளிக் செய்யவும். 

அதில் கீழே உள்ள எண்களை க்ளிக் செய்து, குரூப் 2 தேர்வு முடிவுகளைக் காணலாம். அதேபோல https://tnpsc.gov.in/document/certificateverification/11_2025_GROUP_IIA_PUBLIST.pdf என்ற இணைப்பில், குரூப் 2 ஏ தேர்வு முடிவுகளைக் காண முடியும். 

828 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில், குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கு 1,126 பேரும் குரூப் 2 ஏ தேர்வுக்கு 9,457 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மதுரை பாலிடெக்னிக் விடுதியில் நரக வாழ்க்கை? இடிந்துவிழும் கட்டிடம், புழு உணவு!
மதுரை பாலிடெக்னிக் விடுதியில் நரக வாழ்க்கை? இடிந்துவிழும் கட்டிடம், புழு உணவு!
ஆசிரியை அடித்ததால் சிறுவன் அதிர்ச்சி மரணம்: இளம் வயதில் திடீர் இதய செயலிழப்பு ஏன்? தடுப்பது எப்படி?
ஆசிரியை அடித்ததால் சிறுவன் அதிர்ச்சி மரணம்: இளம் வயதில் திடீர் இதய செயலிழப்பு ஏன்? தடுப்பது எப்படி?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தமிழ்நாடு அரசுப் பள்ளியில் வடமாநில ஆசிரியர்கள் நியமனம் - விஜய் அரசுக்கு சீமான் கொடுத்த வார்னிங் என்ன?
தமிழ்நாடு அரசுப் பள்ளியில் வடமாநில ஆசிரியர்கள் நியமனம் - விஜய் அரசுக்கு சீமான் கொடுத்த வார்னிங் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
Iran Warns America: தாக்குதல் நடத்தினா பதிலுக்கு பேரழிவ ஏற்படுத்துவோம்.! அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் புதிய எச்சரிக்கை
தாக்குதல் நடத்தினா பதிலுக்கு பேரழிவ ஏற்படுத்துவோம்.! அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் புதிய எச்சரிக்கை
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
Embed widget