மேலும் அறிய

TNPSC Group 2 Answer Key: குரூப் 2, 2ஏ தேர்வு ஆன்சர் கீ எப்போது வெளியீடு? டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு

TNPSC Group 2, 2A Exam Answer Key: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இன்னும் 6 வேலை நாட்களில் வெளியிடப்படும் என்று தலைவர் எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். 

TNPSC Group 2, 2A Exam Answer Key: குரூப் 2 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இன்னும் 6 வேலை நாட்களில் வெளியிடப்படும். அதில் தேர்வர்களுக்கு ஏதாவது குழப்பங்கள் இருந்தால், ஆட்சேபனை செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அடுத்த வாரத்தில் ஆன்சர் கீ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

“தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொடர்ந்து போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு சுமூகமாக நடைபெற்றது. குரூப் 2 தேர்வு மூலம் சுமார் 61 வகையான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 2,327 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகின்றன.

இந்த ஆண்டில் 10 தேர்வுகள்

நடப்பாண்டில் 10 தேர்வுகளை நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்து, அறிவிப்பு வெளியிட்டது. இதில் 8 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகின. அதற்கான அறிவிக்கைகள் வெளியாகி, தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. இன்னும் மீதமுள்ள இரண்டு தேர்வுகள் திட்டமிட்ட காலத்தில் அறிவிக்கப்படும்.

இந்த ஆண்டுக்குள் திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளையும் நடத்த வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆண்டு இதுவரை 10 ஆயிரத்து 315 பேருக்கு டிஎன்பிஎஸ்சி வேலை வாய்ப்பு வழங்கி உள்ளது. இன்னும் 10,872 பேருக்கு வரை வேலை வாய்ப்பு கிடைக்கும். இதன்மூலம் மொத்தம் 20 ஆயிரம் பேர் பயனடைவர்.

விடைக்குறிப்பு எப்போது?

குரூப் 2 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இன்னும் 6 வேலை நாட்களில் போடப்படும். அதில் தேர்வர்களுக்கு ஏதாவது குழப்பங்கள் இருந்தால், ஆட்சேபனை செய்யலாம். நிபுணர்கள் குழு மூலம் இறுதி விடைக் குறிப்பு தயாரிக்கப்படும்.

விடைத்தாள் திருத்தும் பணி

சுமார் 7.9 லட்சம் தேர்வர்கள் எழுதிய தேர்வு என்பதால், குரூப் 2 தேர்வு வினாத் தாள்களை திருத்தும் பணிகள் 2 அல்லது 3 மாதங்கள் வரை நடக்கும். கூடுதல் ஸ்கேனிங் இயந்திரங்கள், கூடுதல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவாகத் தேர்வு முடிவுகளை வெளியிடவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். பிறகு முதன்மைத் தேர்வு நடைபெறும்.

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?

கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் குரூப் 4 முடிவுகள் வெளியிடப்படும்’’.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரம்..
தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரம்..
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடையா? - அரசுக்கு சௌமியா அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை!
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடையா? - அரசுக்கு சௌமியா அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
15 ஆண்டு கண்ணீர்... ரூ. 15 ஆயிரம் சம்பளம்! - முதல்வர் விஜய்யின் கைவசம் 11,773 குடும்பங்களின் எதிர்காலம்!
15 ஆண்டு கண்ணீர்... ரூ. 15 ஆயிரம் சம்பளம்! - முதல்வர் விஜய்யின் கைவசம் 11,773 குடும்பங்களின் எதிர்காலம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெல்கம் பேக் மக்களே! தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! கூட்டம் அள்ளுது!
வெல்கம் பேக் மக்களே! தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! கூட்டம் அள்ளுது!
Anna police Medals : காவல் துறையினர் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! அசத்தலான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு
காவல் துறையினர் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! அசத்தலான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு
Udhayanidhi : பெரியார்,அண்ணாவுக்கு தடை.! காவல்துறை CM கட்டுப்பாட்டிலா? காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டிலா? – உதயநிதி கேள்வி
பெரியார்,அண்ணாவுக்கு தடை.! காவல்துறை CM கட்டுப்பாட்டிலா? காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டிலா? – உதயநிதி கேள்வி
ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி அறிவிப்பு
ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி அறிவிப்பு
பெற்ற மகனை ஸ்டாலின் முறையாக வளர்க்கவில்லை .! கீழ்த்தரமாக பேசுவது தான் திமுகவின் DNA- அமைச்சர் ரமேஷ்
பெற்ற மகனை ஸ்டாலின் முறையாக வளர்க்கவில்லை .! கீழ்த்தரமாக பேசுவது தான் திமுகவின் DNA- அமைச்சர் ரமேஷ்
Chennai Power Cut: சென்னை மக்களே.! புதன் கிழமை (16.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! புதன் கிழமை (16.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
மொபைல் வெளிச்சத்தில் அமைச்சர் பேட்டி.! வாரக்கணக்கில் நீடிக்கும் மின்வெட்டு- விளாசிய அன்புமணி
மொபைல் வெளிச்சத்தில் அமைச்சர் பேட்டி.! வாரக்கணக்கில் நீடிக்கும் மின்வெட்டு- விளாசிய அன்புமணி
Hyundai Safety Features: இனி திருடவே முடியாது..! ஹுண்டாயின் புத்தம் புதிய பாதுகாப்பு அம்சம் - எப்படி வேலை செய்யும்?
இனி திருடவே முடியாது..! ஹுண்டாயின் புத்தம் புதிய பாதுகாப்பு அம்சம் - எப்படி வேலை செய்யும்?
Embed widget