மேலும் அறிய

TNPSC Group 1 Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு இலவசப் பயிற்சி: ஆட்சியர் அறிவிப்பு- கலந்துகொள்வது எப்படி?

குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படுவதாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ குரூப் 1 (TNPSC-GROUP- I Prelims) முதல்நிலை தேர்விற்காக சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டு மையத்தில்‌ நடைபெற்று வரும்‌ இலவச பயிற்சி வகுப்புகளில்‌ விருப்பமுள்ள தகுதி வாய்ந்தவர்கள்‌ சேர்ந்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்‌தலைவர்‌ ரஷ்மி சித்தார்த்‌ ஐஜகடே தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

’’தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படவுள்ள குரூப் – 1 (TNPSC-GROUP-I ) தேர்விற்கு 90 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 28.03.2024 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்‌ தகுதி இளநிலைப் பட்டப்படிப்பு ஆகும்‌.

தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ குரூப் 1-ற்கான முதல்நிலை தேர்விற்கு இலவசp பயிற்சி வகுப்புகள்‌, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ இயங்கும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தில்‌ 22-05-2024 முதல்‌ (திங்கள்‌ முதல்‌ வெள்ளி வரை) நடத்தப்பட்டு வருகின்றன.

பயிற்சி வகுப்பில் இணைவது எப்படி?

இப்பயிற்சி வகுப்பில்‌ சேர விருப்பமுள்ளவர்கள்‌, தேர்விற்கு விண்ணப்பம்‌ செய்ததற்கான விண்ணப்ப நகல்‌, தங்களது ஆதார்‌ அட்டையின்‌ நகல்‌ மற்றும்‌ பாஸ்போர்ட்‌ அளவுள்ள புகைப்படத்துடன்‌ சென்னை - 32, கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌நெறி வழிகாட்டும்‌ மையத்தை நேரடியாக அலுவலக வேலை நாட்களில்‌ அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றார்கள்‌.

மேலும்‌, விவரங்களுக்கு, decgc.chennai24@gmail.com என்ற மின்னஞ்சலில்‌தொடர்பு கொள்ளலாம்‌.

சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள்‌ இப்பயிற்சி வகுப்பில்‌ சேர்ந்து பயன்பெறலாம்.’’

இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ ரஷ்மி சித்தார்த்‌ ஜகடே தெரிவித்துள்ளார்‌.

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள்

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தத் தேர்வுகள் மூலம் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசுப் பணிகளில் நியமனம் செய்யப்படுகின்றனர். 

அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளன. குரூப் 2, 2ஏ தேர்வுகள் செப்டம்பர் 28ஆம் தேதியும் நடைபெற உள்ளன.  

ஜூலை 13 குரூப் 1 தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு மார்ச் 28 முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பித்தனர். குரூப் 1 தேர்வுக்கு 90 காலி இடங்கள் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.  

குரூப் 1 குறித்த முழுமையான அறிவிக்கையைக் காண https://www.tnpsc.gov.in/Document/english/04_2024_GRP1_ENG_.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது அவசியம். 

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Embed widget