மேலும் அறிய

TNEA 2022 Rank List: பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்: வெளியிட்ட அமைச்சர் பொன்முடி.. சரிபார்ப்பது எப்படி?

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. இதை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தில் வெளியிட்டார். 

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. இதை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தில் வெளியிட்டார். 

2022ஆம் ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு ஆக.20ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார். 

பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க / அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் ஜூலை 19 ஆக இருந்தது. எனினும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகத் தாமதமாகின. இதனால், விண்ணப்பிக்கக் கடைசித் தேதி கால அவகாசம் இல்லாமல் நீட்டிக்கப்பட்டது. 

இதற்கிடையே ஜூலை 22ஆம் தேதி சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் இருந்து 5 நாட்களுக்கு, அதாவது ஜூலை 27 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஜூலை 27 வரை மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறை

இதற்கிடையே சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியானதால், பொறியியல் கலந்தாய்வுத் தேதிகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி டிஎஃப்சி மையங்களில் தொடங்கியது. 

முதற்கட்டமாக விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டின்கீழ் 2,442 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி தொடங்கியது. இந்தப் பணி ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்காக மாணவர்கள் யாரும் டிஎஃப்சி மையங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. சரிபார்ப்பு நிலை குறித்து தங்களுக்கு உள்ள லாகின் ஐடியில் சென்று சரிபார்க்கலாம். ஒவ்வொருக்கும் தனித்தனியாக செய்திகள் அனுப்பப்பட்டன. 

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையில், தரவரிசை பட்டியலும் வெளியாகி உள்ளது. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

TNEA 2022 Rank List: பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்: வெளியிட்ட அமைச்சர் பொன்முடி.. சரிபார்ப்பது எப்படி?

1,58,157 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

முன்னதாக 2,11,905 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முன்பதிவு செய்திருந்தனர். அதில், 1,69,080 பேர் பதிவுக் கட்டணம் செலுத்திய நிலையில், அவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. 

இதில் 1,58,157 மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்தவையாகக் கண்டறியப்பட்டு, அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 10,923 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 

அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு தனியாக 2 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 22,587 அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலும் இன்று வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 431 கல்லூரிகள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளன. இந்த ஆண்டு ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்) இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,48, 811 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சென்னையில் அக்டோபர் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சரிபார்ப்பது எப்படி?

மாணவர்கள் http://tneaonline.org/ என்ற இணையப் பக்கத்தின்மூலம் தரவரிசைப் பட்டியலைத் தெரிந்துகொள்ளலாம்.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு குறித்து முழுமையாக அறிய: https://static.tneaonline.org/docs/Academic_Rank.pdf?t=1660629396774

*

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
Best Mileage Cars Under 7 Lakh: சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Embed widget