மேலும் அறிய

TN TRB SGT Hall Ticket: இடைநிலை ஆசிரியர்‌ தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

TN TRB SGT Hall Ticket 2024: அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்‌ பணியாற்ற நடத்தப்படும் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்‌ பணியாற்ற நடத்தப்படும் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும் நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் மூலம் கற்பித்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவதற்கான அரசாணை எண் 149, கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது.

நேரடி நியமனம்‌

தொடர்ந்து பள்ளிக் கல்வித்‌துறையில்‌ தொடக்கக்‌ கல்வி இயக்கக நிர்வாகத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ நேரடி நியமனம்‌ மூலம்‌ இடைநிலை ஆசிரியர்‌ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. 

ஆசிரியர்‌ தேர்வு வாரிய அறிவிக்கை நாள்‌ 09.02.2024-ன்படி 2023-2024 ஆம்‌ ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர்‌ தேர்வு வரும்‌ 21.07.2024 அன்று நடத்தப்பட உள்ளது. 1768 பணியிடங்கள் கொண்ட இடைநிலை ஆசிரியர் தேர்வை எழுத 26,510 தேர்வர்கள்‌ விண்ணப்பித்துள்ளனர்‌.

பதிவிறக்கம்‌ செய்வது எப்படி?

இந்த நிலையில் விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச்‌ சீட்டு (Hall Ticket) ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணைய தளத்தில்‌ (https://www.trb.tn.gov.in) பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள்‌அவர்களது யூசர் எண் மற்றும்‌ கடவுச்‌ சொல்‌ ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச்‌ சீட்டினை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்.

https://trb1.ucanapply.com/login என்ற இணைப்பை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

முன்னதாகவே ஹால் டிக்கெட்டைப் பெறலாம்

தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டினை பதிவிறக்கம்‌ செய்வதில்‌ ஏற்படும்‌ கடைசி நேரப் பதற்றத்தைத்‌ தவிர்க்கும்‌ பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்‌டுள்ளது. எனவே, தேர்வர்கள்‌ தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம்‌ செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.trb.tn.gov.in

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget