மேலும் அறிய

Academic Calendar: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அசத்தல் அறிவிப்பு; இந்த நாட்களில் விடுமுறை- திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடு

Revised Academic Calendar 2024 - 25: இரண்டு சனிக்கிழமைகளைத் தவிர பிற சனிக்கிழமைகள் அனைத்தும் விடுமுறை அளித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கான திருத்தப்பட்ட ஆண்டு நாட்காட்டியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

ஆண்டு முழுவதும் ஒரு கல்வியாண்டில் பள்ளி செயல்படும் வேலை நாட்கள், தேர்வு தேதிகள், விடுமுறைகள், உயர் கல்வி வழிகாட்டி முகாம் உட்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டியை ஆண்டுதோறும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டு முதல் இந்த நாட்காட்டி வெளியாகி வருகின்றது. இதற்கிடையே 2024-25ஆம் கல்வி ஆண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது.

கடந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு 217 வேலை நாட்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மூன்று நாட்கள் அதிகரித்து, 220 நாட்கள் ஆக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர்களின் கோரிக்கைக்கு ஏற்ப 10 நாட்கள் குறைக்கப்பட்டு, 210 நாட்கள் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நேரம் எப்படி?

பாட வேளைகளுக்கான நேரத்தைப் பொறுத்தவரை, காலை 9:00 மணிக்கு பள்ளி வேலை நேரம் துவங்க வேண்டும். முதல், 30 நிமிடங்கள் காலை வணக்கக் கூட்டம் நடத்தப்படும். காலை 9:30 முதல், 10:10 மணி வரை முதல் பாட வேளையில், தமிழ் கற்பிக்க வேண்டும். 10ம் வகுப்பு வரை இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் உயர் கல்வி வழிகாட்டி வகுப்புகள், மொழிகள் ஆய்வகம், மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் ஆகியவையும் நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், இரண்டு சனிக்கிழமைகளைத் தவிர பிற சனிக்கிழமைகள் அனைத்தும் விடுமுறை அளித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். அதாவது சனிக்கிழமைகள் டிசம்பர் 21ஆம் தேதியும் 2025ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதியும் பள்ளிகள் செயல்பட உள்ளன.

Academic Calendar: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அசத்தல் அறிவிப்பு; இந்த நாட்களில் விடுமுறை- திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடு

அரையாண்டு தேர்வு எப்போது?

அரையாண்டு மற்றும் 2-ம் பருவத்தேர்வு டிசம்பர் 16 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்படும். தொடர்ந்து டிசம்பர் 24-ல் தொடங்கி ஜனவரி 1-ம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 9 முதல் 17ஆம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

பள்ளி வேலை நாள் ஏப்ரல் 27-ம் தேதியுடன் முடிகிறது. அதன்பின் கோடை விடுமுறை ஏப்ரல் 28-ம் தேதி முதல் வழங்கப்படும். திருத்தி அமைக்கப்பட்ட மொத்த பள்ளி வேலை நாட்கள் 210 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்.14 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

இதற்கிடையே 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அக்டோபர் 14ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget