மேலும் அறிய

TN 12th Result 2025 Declared: வெளியானது பிளஸ்-2 தேர்வு முடிவுகள்... சாதித்துக்காட்டிய மாணவ மாணவிகள்

Tamil Nadu 12th Result 2025 Declared: மே 8 ஆம் தேதியான இன்று காலை 9.00 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.00 மணியளவில் வெளியானது

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 

ஒவ்வொரு மாணவர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டம் என்றால் அது 12 ஆம் வகுப்பு தான், மாணவர்கள் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்லவதற்கு இது தான் கேட் பாஸ். அந்த வகையில் 2024-2025 கல்வி ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியாகி உள்ளது. 

மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை  8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். மார்ச் 3ஆம் தேதி முதல் 25 வரை தேர்வு நடந்தது. இதை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.4ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்தது. எனினும், ஒருநாள் முன்கூட்டியே 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது.

இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மொத்தம் 95.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்ற ஆண்டை விட தேர்ச்சி % அதிகம்:

இந்த ஆண்டு தேர்வெழுதிய மொத்தப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 7,92,494 இதில் மாணவியர்களின் எண்ணிக்கை : 4,19,316, மாணவர்களின் எண்ணிக்கை : 3,73,178

தேர்ச்சி விவரங்கள்

  • தேர்ச்சி பெற்றவர்கள் : 7,53,142 (95.03%)
  • மாணவியர் 4,05,472 (96.70%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
  • மாணவர்கள் 3,47,670 (93.16%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
  • மாணவர்களை விட 3.54 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 10,049
  • கடந்த மார்ச் 2024 பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 0.47% சதவிகிதம் கூடுதலாக உள்ளது.

கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 7,60,606 பேர் எழுதிய நிலையில் மொத்தம் 7,19,196 மாணவ தேர்ச்சி பெற்றனர்.தமிழ்நாட்டில் மொத்தம் 2478 பள்ளிகள் 100% தேர்ச்சியை அடை . இவற்றில் 397 பள்ளிகள் அரசுப் பள்ளிகள் ஆகும். ஒட்டுமொத்த கடந்த் ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56% ஆகும்  

அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள் டாப் 5

 முதல் மாவட்டம் - அரியலூர் 98.82%

 இரண்டாவது மாவட்டம் - ஈரோடு 97.98%

மூன்றாவது மாவட்டம் திருப்பூர் 97.53%

நான்காவது மாவட்டம் கோவை-  97.48%

ஐந்தாவது மாவட்டம் கன்னியாகுமரி-97.01%

முடிவுகள் இங்கே காணலாம்

அதன்படி மே 8 ஆம் தேதியான இன்று காலை 9.00 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவ, மாணவிகள்  தேர்வு முடிவுகளை www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ,  www.dge.tn.gov.in , www.tnresults.nic.in ஆகிய இணையதளங்கள் வழியாகத் தெரிந்து கொள்ள என கூறப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் வழக்கம்போல மாணவர்களை விட, மாணவிகளே இந்தாண்டும் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

"எங்கள் வாழ்நாளைப் பள்ளிக்கே தந்துவிட்டோம்!" - அமைச்சரிடம் மனு அளித்து கதறிய பகுதிநேர ஆசிரியர்கள்!
கலெக்டரோட ஒரு கப் 'காபி'... அரசுப் பள்ளி மாணவர்களின் கனவுகளுக்குக் கிடைத்த 'சூப்பர்' சிறகுகள்!
கலெக்டரோட ஒரு கப் 'காபி'... அரசுப் பள்ளி மாணவர்களின் கனவுகளுக்குக் கிடைத்த 'சூப்பர்' சிறகுகள்!
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
Maruti Safest Cars: 5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
Embed widget