மேலும் அறிய

விடைத்தாள் திருத்தம்; விடுமுறை அளிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை- இதற்குத்தானா?

கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி ஏப்ரல் 18ஆம் தேதியும், ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் 20ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளன. இதற்கு இடைப்பட்ட ஏப்ரல் 19ஆம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணி நடைபெற உள்ளது.

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணிக்கு ஏப்ரல் 19ஆம் தேதி அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. மார்ச் 25ஆம் தேதி அன்று தேர்வு நடந்து முடிந்தது. கடைசி நாளான மார்ச் 25-ல் இயற்பியல் மற்றும் பொருளாதார பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.  

இந்தத் தேர்வை சுமார் 8.21 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு மையங்கள் தயார் படுத்தி வைக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் 3,316 மையங்​கள் அமைக்​கப்​பட்டன.  பொதுத் தேர்​வுக்கான அறை கண்காணிப்​பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் நியமிக்​கப்​பட்டு இருந்தனர். தொடர்ந்து ஏப்ரல் 4-ல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. 

ஏப்ரல் 19ஆம் தேதி அன்று விடுமுறை

இந்த நிலையில், ஏப்ரல் 19ஆம் தேதி அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அன்பழகன் கூறி உள்ளதாவது:

''தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணிகள் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி ஏப்ரல் 18ஆம் தேதியும், ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் 20ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளன. இதற்கு இடைப்பட்ட ஏப்ரல் 19ஆம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணி நடைபெற உள்ளது.

இதனால் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாட முடியாத சூழல் நிலவுகிறது. இதை உணர்ந்து ஏப்ரல் 19ஆம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணிக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

எதற்கு இந்த விடுமுறை?

இது ஆசிரியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறந்த முறையில் கொண்டாட உதவும். மேலும், மற்ற ஆசிரியர்களுக்கும் தொடர் பணிகளுக்கு இடையே சிறு ஓய்வு கிடைக்கும். அவை அடுத்து வரும் நாட்களில் ஆசிரியர்கள் புத்துணர்ச்சியுடன் பணிபுரிவதற்கு வழிவகுக்கும்.

எனவே, ஏப்ரல் 19ஆம் தேதி சனிக்கிழமை அன்று விடைத்தாள் மதிப்பீட்டு முகாமுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்''.

இவ்வாறு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

"TET தேர்வு அறையில் கலெக்டர் ஸ்ரீகாந்த்: மயிலாடுதுறையில் இன்று நடந்தது என்ன?"
புதுச்சேரி & காரைக்கால் அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: 4-ஆம் வகுப்பு முதல் PG வரை விண்ணப்பிக்கலாம்!
புதுச்சேரி & காரைக்கால் அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: 4-ஆம் வகுப்பு முதல் PG வரை விண்ணப்பிக்கலாம்!
5 வருடம் சொன்னீங்க... நாங்க 16 வருஷமா இருக்கோம்! - முதல்வர் விஜய்க்கு பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த உருக்கமான வேண்டுகோள்.
5 வருடம் சொன்னீங்க... நாங்க 16 வருஷமா இருக்கோம்! - முதல்வர் விஜய்க்கு பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த உருக்கமான வேண்டுகோள்.
மதுரை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வு: பலத்த சோதனைக்கு பின் நடைபெற்றது !
மதுரை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வு: பலத்த சோதனைக்கு பின் நடைபெற்றது !

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
Ali Khamenei Sons Crying Video: டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் கார் இன்னும் குறைவா.. ரூ.1.45 லட்சம் தள்ளுபடி: மிஸ் பண்ணிடாதீங்க!
நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் கார் இன்னும் குறைவா.. ரூ.1.45 லட்சம் தள்ளுபடி: மிஸ் பண்ணிடாதீங்க!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
Embed widget